- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த பிரபல நடிகை - சரோஜா தேவி ஜெயலலிதா லதா...

எம்ஜிஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்த பிரபல நடிகை – சரோஜா தேவி ஜெயலலிதா லதா 3 பேரில் முதல் இடத்தை பிடித்தவர் யார்?

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிப்பது என்பது அன்றைய கதாநாயகிகள் நடிகைகள் மத்தியில் பெரும் போட்டியே நிலவியது. ஆனால் தனது படங்களில் எந்த நடிகை தனக்கு ஜோடி என்பதை படத்தின் நாயகன் எம்ஜிஆர் தான் முடிவு செய்வார்.

ஏனென்றால் இந்த படத்தில் தனக்கு எந்த நடிகை ஜோடியாக நடித்தால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும், இந்த கேரக்டரில் எந்த நடிகை நடித்தால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற டெக்னிக் அறிந்தவர் எம்ஜிஆர். அதனால் அவர் தனது படங்களின் கதைக்கு ஏற்ப நாயகிகளை தேர்வு செய்து நடிக்க வைப்பார்.

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் ஜெயலலிதா சரோஜா தேவி பத்மினி பானுமதி லதா கேஆர் விஜயா சாவித்திரி தேவிகா என பல நடிகைகள் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இதில் சில நடிகைகள் தொடர்ந்து பல படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருக்கின்றனர். அதில் அதிக படங்களில் எம்ஜிஆருக்கு சில நடிகைகள் மட்டுமே திரும்ப திரும்ப ஜோடியாக நடித்துள்ளனர்.

இதில் அதிக படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த நடிகைகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம். எம்ஜிஆருடன் நடிகை ராஜ சுலோச்சனா 5 படங்களில் நடித்துள்ளார். நடிகை விஎன் ஜானகி, அதாவது எம்ஜிஆரின் மனைவி 5 படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். நடிகை மஞ்சுளா எம்ஜிஆருடன் 5 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

அடுத்து நடிகை அஞ்சலிதேவி 6 படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதேபோல் நடிகை பானுமதி எம்ஜிஆருக்கு ஜோடியாக 6 படங்களில் நடித்திருக்கிறார். நடிகை பத்மினி 8 படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதேபோல் நடிகை கே.ஆர். விஜயாவும் 8 படங்களில் எம்ஜிஆருடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.

அடுத்து எம்ஜிஆருடன் அதிக படங்களில் நடித்தவர் என்ற 3வது இடத்தில் இருப்பவர் நடிகை லதா. இவர் மொத்தம் 12 படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து நடிகை சரோஜாதேவி 26 படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்து 2ம் இடத்தை பிடித்துள்ளார். இதில் எம்ஜிஆருடன் அதிக படங்களின் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். இவர் மொத்தம் 28 படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்