- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசாணையில தளபதி விஜய்னு போட்டதுக்கு யாரு காரணம் தெரியுமா?... சவுக்கு சங்கர் பகீர் தகவல்...

அரசாணையில தளபதி விஜய்னு போட்டதுக்கு யாரு காரணம் தெரியுமா?… சவுக்கு சங்கர் பகீர் தகவல்…

- Advertisement -

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் லியோ. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இதனை எடுத்துள்ளார். லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக த்ரிஷாவும், மகனாக மாத்யூ தாமஸும் நடித்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக கெளதம் மேனன் வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் வருகிறார். இதுபோக மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் படத்தில் உள்ளனர். லியோவிலிருந்து நா ரெடி தான், பேடாஸ், அன்பெனும் ஆயுதம் ஆகிய மூன்று பாடல்களும் வெளியாகி ஹிட் அடித்தது.

- Advertisement -

இதில் விஜய்க்கு பேடாஸ் பாடல்தான் புடிக்கும் என பாடலாசிரியர் விஷ்ணு எடவன் தெரிவித்தார். சமீபத்தில் லியோ ட்ரெயிலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இருப்பினும் அதில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பலரையும் முகம் சுழிக்க வைத்ததால், அது தற்போது மியூட் செய்யப் பட்டுள்ளது. மொத்தம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லியோ எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த படத்தில் விஜய், பார்த்தியாகவும், லியோவாகவும் வருகிறார். படத்தில் விஜயும், அர்ஜுனும் மோதி கொள்ளும் காட்சிகள் அட்டகாசமாக இருக்குமாம். கழுதை புலி காட்சி, கார் சேஸிங் காட்சியிலும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்களாம். லியோவில் கடைசி 40 நிமிடங்கள் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என சினிமா விமர்சனகர்கள் பேசி கொள்கிறார்கள்.

- Advertisement -

முன்னதாக லியோ இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அப்போது படத்தை விநியோகிப்பது தொடர்பாக தயாரிப்பாளர் லலித் குமாரை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மிரட்டுவதாகவும், இசை வெளியீட்டு விழாவுக்கு குடைச்சல் கொடுப்பதாகவும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டினார். ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்தார் லலித் குமார். இதனிடையே லியோ பட இசை வெளியீட்டு விழாவும் ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் போலி டிக்கெட்கள் விற்பனையால் இந்த முடிவை எடுத்ததாக தயாரிப்பாளர் விளக்கினார். ஆனால் இந்த விஷயத்தில் எங்களை முட்டாள் ஆக்காதீர்கள் என்று சவுக்கு சங்கர் சாடினார்.

இப்படியான சூழலில் அடுத்த வாரம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகிறது. இதற்காக தயாரிப்பு நிறுவனம் வழங்கிய கோரிக்கையை ஏற்று, 19ஆம் தேதி ஆறு காட்சிகளுக்கும், 20 முதல் 24ஆம் தேதி வரை ஐந்து காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக அரசாணையில் தளபதி விஜய் என்று குறிப்பிடப்பட்டிருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறப்பு காட்சி வழங்கப்பட்டதற்கு சவுக்கு சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் உள்துறை செயலாளர் விஜய் ரசிகர் என்பதாலேயே, அரசாங்க ஆணையில் தளபதி என்று குறிப்பிடப் பட்டிருந்ததாகவும் அவர் சாடியுள்ளார். சவுக்கு சங்கரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்