- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 69 படத்தின் ஓவர்சீஸ் உரிமையை இத்தனை கோடிகளுக்கு தயாரிப்பு நிறுவனம் விற்றதா? ஆனா அதிலும்...

தளபதி 69 படத்தின் ஓவர்சீஸ் உரிமையை இத்தனை கோடிகளுக்கு தயாரிப்பு நிறுவனம் விற்றதா? ஆனா அதிலும் ஒரு தரமான சம்பவம் நடந்திருக்குதே – லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

தி கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் 5ம் தேதி கேரள மாநிலம் பையனூரில் துவங்கியது. முதல்கட்டமாக விஜய் மற்றும் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் பங்கேற்ற குத்துப்பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இந்த பாடலை நடிகர் விஜயே பாடியிருக்கிறார்.

எச் வினோத் இயக்கும் தளபதி 69 படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். பாபி தியோல் வில்லனாாக நடிக்கிறார். கௌதம் மேனன், நரேன், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இது நான் நடிக்கிற கடைசிப் படம் என்று நடிகர் விஜய் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபரில்தான் திரைக்கு வர உள்ளது. அதனால் வருகிற ஏப்ரலுக்குள் படத்தை முடித்துவிட்டு விஜய், தனது கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட இருக்கிறார்.

இந்த சூழலில், தளபதி 69 படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரடக்சன்ஸ் இப்போதே படத்துக்கான வியாபாரத்தை ஆரம்பித்து விட்டது. துபாயை சேர்ந்த முக்கிய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தளபதி 69 படத்தின் ஓவர்சீஸ் உரிமையை ரூ. 75 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. மேலும், இந்த தொகையை ஒரே தவணையில் மொத்தமாகவும் கேவிஎன் புரடக்சன்ஸ் பெற்றுள்ளது.

- Advertisement -

அத்துடன், தளபதி 69 படத்தை தயாரிக்க, மதுரையை சேர்ந்த அன்புசெழியனிடம் கேவிஎன் புரடக்சன்ஸ் தரப்பில் பைனான்ஸ் கேட்ட நிலையில், அவர் தர மறுத்துவிட்டார். அதனால் தளபதி 69 படத்தின் ஓவர்சீஸ் உரிமையை வாங்கிய துபாய் நிறுவனத்திடமே ரூ. 100 கோடி கடனாகவும் அந்த நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துபாயை சேர்ந்த வினியோகஸ்தர் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம் என்பதால், கேவிஎன் புரடக்சன்ஸ் சார்ந்த முக்கிய நிர்வாகிகளே துபாய்க்கு நேரில் சென்று, அவர்களை சந்தித்து தளபதி 69 ஓவர்சீஸ் உரிமையை ரூ. 75 கோடிக்கு விற்று சிங்கிள் பேமென்ட் ஆக பெற்றதோடு, ரூ. 100 கோடி கடனாகவும் வாங்கியுள்ளனர் என்பது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்