தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் ஹீரோவாக நடிப்பது 1980 களிலேயே தொடங்கிவிட்டது. அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் ஹீரோக்களாக நடிக்க வந்துவிட்டனர். இதில் பலர் குணச்சித்திர நடிகர்களாகவும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று முதல் இன்று வரை இயக்குனராக ஹீரோவாக நடித்து சாதித்து நடிகர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் கே பாக்யராஜ் பாண்டியராஜன் பாரதிராஜா பார்த்திபன் சுந்தர் சி மணிவண்ணன் மனோபாலா பிரதீப் ரங்கநாதன் ஆர் சுந்தர்ராஜன் சேரன் கரு பழனியப்பன் செல்வராகவன் மிஷ்கின் என பல இயக்குனர்களை உதாரணமாக சொல்லலாம்.
இப்போது அந்த வரிசையில் நடிகர் பாலாஜி சக்திவேல் இணைந்து விட்டார். விக்ரம் நடித்த சாமுராய் பரத் சந்தியா நடித்த காதல் தமன்னா நடித்த கல்லூரி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். பிறகு அசுரன் குட்நைட் குடும்பஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் பாலாஜி சக்திவேல் சில கேரக்டர்களில் நடித்திருந்தார்.
இப்போது அவர் கதையின் நாயகனாக நடிக்க தொடங்கி இருக்கிறார். ஆஃப் தி ரெக்கார்ட் என்ற பைலட் படத்தில் கதையின் நாயகனாக பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார். இயக்குனர் ஏ ஆர் முத்துராமன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சாதாரண மனிதனிடையே உருவாகும் கதையாக உள்ளது.
அவர்களுக்குள் உருவாகும் உணர்வு பூர்வமான மோதல் பதட்டம் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த பைலட் திரைப்படம் எதார்த்தமும் உணர்ச்சிகரமான அனுபவத்தையும் பார்வையாளர்களுக்கு தரும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் பாலாஜி சக்திவேல் உடன் ருக்குமணி ஆறு பாலா பிரதீப் மற்றும் மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நரேந்தர் இசையமைத்துள்ளார். இப்போது 12 நிமிடங்களைக் கொண்ட இந்த படம் விரைவில் முழு நீள திரைப்படமாக உருவாகிறது. அதிலும் பாலாஜி சக்திவேல் தான் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.





