- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென திருநங்கையாக மாறிய நடிகர் - ஏலே, டிக்டாக்ல பண்ணுன அலப்பறை பத்தலைன்னு இங்கேயும் வேலைய...

திடீரென திருநங்கையாக மாறிய நடிகர் – ஏலே, டிக்டாக்ல பண்ணுன அலப்பறை பத்தலைன்னு இங்கேயும் வேலைய ஆரம்பிச்சுட்டீங்களா?

- Advertisement -

முன்பெல்லாம், சினிமா துறை சார்ந்தவர்களின் வாரிசுகள், உறவினர்கள், நண்பர்கள் வாயிலாக சிலர், சினிமாவில் அறிமுகமாவது வழக்கம். சில நேரங்களில் இயக்குநர்களே, சிலரை அடையாளம் கண்டுபிடித்து தமிழ் சினிமாவுக்குள் அழைத்து வரப்பட்டதும் உண்டு. பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து, சினிமா வாய்ப்புகளை பெற்றவர்களும் உண்டு.

ஆனால், சோஷியல் மீடியா காலமாகிவிட்ட இன்றைய சூழலில் மக்கள் மத்தியில் பிரபலமடைபவர்கள் விரைவில் டிவி ஷோக்களுக்கு வந்து விடுகின்றனர். டிவி ஷோக்களில் பிரபலமானவர்கள், அடுத்தகட்டமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து விடுகின்றனர். அப்படி பலரை நம்மால் இப்போது அடையாளம் காட்ட முடியும்.

- Advertisement -

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா, ராமர் போன்றவர்களை சொல்ல முடியும். அதே போல், டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர்களில் மிக முக்கியமானவர் ஜிபி முத்து. இவரது முழு பெயர் ஜி. பேச்சிமுத்து. ஜிபி முத்து என்ற பெயரில் டிக்டாக் செயலி மூலம், பல பாடல்களுக்கு நடனமாடி, பேப்பர் ஐடிகளை கண்டபடி அவரது தூத்துக்குடி மொழியில் திட்டி, மக்களிடம் பிரபலமானவர்தான் செலிபிரட்டி ஜிபிமுத்து.

இதையடுத்து, கடந்தாண்டு நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்ட ஜிபி முத்து, சில வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தார். பிறகு, குழந்தைகளை விட்டு பிரிந்திருக்க முடியவில்லை என, பிக்பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறி விட்டார். அவரது திடீர் முடிவு விஜய் டிவி பார்வையாளர்களை மட்டுமின்றி, கமல்ஹாசனே சற்று ஏமாற்றமாக பேசினார்.

- Advertisement -

தச்சு வேலை தொழிலாளியான ஜிபிமுத்து, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் என்பதால், அவரது பேச்சு இயல்பிலேயே மிக ரசிக்கும்படியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஜிபிமுத்து பங்கேற்றார். சன்னி லியோன் நடித்த கோஸ்ட் என்ற பேய் படத்திலும் அவர் நடித்தார். தொடர்ந்து அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

இப்போது ஆர்வன் என்ற புதிய படத்தில் நடித்துவரும் ஜிபி முத்து, இந்த படத்தில் திருநங்கையாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கை தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. டிக்டாக் செயலியில் பெண் வேடமிட்டு அவர் பயங்கர அலப்பரை செய்தவர்தான். இப்போது சினிமாவிலும் அதே அலப்பரையை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்