- Advertisement -
Homeபொழுதுபோக்குடி.இமான் என்ன சொல்ல வரார்னு புரியுதா?.. சில ஹீரோக்கள் அக்மார்க் வில்லன்கள்.. பரபரப்பை கிளப்பிய பத்திரிகையாளர்

டி.இமான் என்ன சொல்ல வரார்னு புரியுதா?.. சில ஹீரோக்கள் அக்மார்க் வில்லன்கள்.. பரபரப்பை கிளப்பிய பத்திரிகையாளர்

- Advertisement -

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவர். ஒருகாலத்தில் விஜய்யை எப்படி சிறுவர்களுக்கு பிடித்ததோ அதேபோல் சிவாவையும் இப்போது சிறுவர்களுக்கு ரொம்பவே பிடிக்கிறது. அதுமட்டுமின்றி விஜய்க்கு எப்படி பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்து அவரை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்ததோ அதேபோல்தான் சிவகார்த்திகேயனுக்கும்.

தற்போது வேண்டுமானால் சிவாவுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக அனிருத் இருக்கலாம். ஆனால் அவருடைய ஆரம்பகாலத்தில் அவருக்கு கைக்கொடுத்த மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களுக்கு டி. இமான் இசை. அதேபோல் சிவா வளர்ந்தவிட்ட பிறகும் அவருக்கு நம்ம வீட்டு பிள்ளை படத்துக்கும் இசையமைத்து சிறந்த இசையையே கொடுத்தார்.

இப்படி ஹிட் காம்போவாக இருந்த இந்தக் கூட்டணி கடந்த சில வருடங்களாக இணைந்து பணியாற்றவில்லை. இதற்கான காரணமும் தெரியாமல் இருந்தது. இந்த சூழலில் இமான் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்ற முடியாது. ஏனெனில் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் ஒன்றை செய்துவிட்டார்.

அந்த துரோகம் என்னவென்று என்னால் வெளியே சொல்ல முடியாது. ஆனால் அதை நான் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று ரொம்ப ரொம்ப தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். அனைத்தையும் நான் மறைப்பதற்கு என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம்தான் காரணம். ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராகவும், அவர் ஹீரோவாகவும் இருந்தால் நாங்கள் இணைவது நடக்கலாம்” என்றார்.

இமானின் இந்த பேட்டி ஒட்டுமொத்த திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் இமான் இப்படி ஒரு புகாரை கூறியிருப்பதால் பல்வேறு யூகங்கள் காரணங்களாக கூறப்படுகின்றன. மேலும் இதற்கு சிவகார்த்திகேயன் விளக்கம் கொடுப்பாரா என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனது எக்ஸ் தளத்தில், “டி.இமான் என்ன சொல்ல வர்றாருன்னு புரியுதா? வலைப்பேச்சு-இந்த விஷயத்தை பலமுறை நாசுக்கா சொல்லியிருக்கு. இன்று அதையே தன் வாயால் உறுதிப்படுத்துகிறார் இமான். சில ஹீரோக்கள் நிஜ வாழ்வில் அக்மார்க் வில்லன்கள். அவ்வளவே” என குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்தப் பதிவும் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சற்று முன்