- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவரை போல, இவரையும் எங்கள் தலைவர்தான் காப்பாத்துவாரு - லியோ படத்தை பற்றி புது...

அவரை போல, இவரையும் எங்கள் தலைவர்தான் காப்பாத்துவாரு – லியோ படத்தை பற்றி புது அலப்பரையை கௌப்பிய ரஜினி ரசிகர்கள்

- Advertisement -

லியோ படம் இன்று ரிலீஸ் ஆகி, திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் சூப்பர், படம் சுமார் என்ற இரண்டு விதமான கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. விஜய் ரசிகர்களை பொருத்தவரை அவர்களை விஜய் திருப்திபடுத்தி இருக்கிறார். டைரக்டர் லோகேஷ் கனகராஜ், வழக்கமான ஆக்சனை இந்த படத்திலும் கையில் எடுத்து இருக்கிறார்.

விஜய் படங்களை பொருத்தவரை, குடும்பம் குடும்பமாக அவரது படங்களை பார்க்க வருவர். குறிப்பாக இளம்பெண்கள், இல்லத்தரசிகள், கல்லூரி, பள்ளி மாணவியர் மத்தியில் விஜய்க்கு நல்ல இமேஜ் உள்ளது. பெண்கள் பலரும், விஜய் அண்ணா படம் என்றே அன்பாக குறிப்பிட்டுச் சொல்வது வழக்கம். இந்த நிலையில், முழுக்க ஆக்சன் படமான லியோ, பெண்களை கவர அதிக வாய்ப்பில்லை. இதனால், பெண் ரசிகைகள் கூட்டம், நாளடைவில் குறையும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஏற்கனவே, டிரெய்லரில் வந்த கெட்ட வார்த்தையால் விஜய் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அது படத்தில் வரும் பார்த்திபன் என்ற கேரக்டர் பேசிய வார்த்தை என்று சமாளித்தாலும், அது சரி ஆனால், படம் பார்க்க வரும் ரசிகர்கள் விஜயை பார்க்க வருகிறார்களா, பார்த்திபனை பார்க்க வருகிறார்களா என்ற சினிமா விமர்சகர்களின் கேள்வியால் நிலைகுலைந்து போனார் லோகேஷ் கனகராஜ்.

படத்தில் நிறைய நல்ல நடிகர்கள் இருந்தும் ஒரு சிலருக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களுக்கு சும்மா வந்து போகும் கேரக்டர் மட்டுமே தரப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தந்துள்ளது. மொத்தத்தில் ஒரு தரப்பு ரசிகர்களை மட்டுமே லோகேஷ் கனகராஜ் திருப்திபடுத்தி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே ரஜினி ரசிகர்கள் தரப்பில், லியோ குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. முதலில் விஜய் அஜீத் ரசிகர்கள் போட்டி என்ற நிலையில் இருந்து மாறி, இப்போது ரஜினி விஜய் என்ற மோதல்போக்கு ரசிகர்களிடையே நீடித்து வருகிறது. அதிலும் விஜய் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சையை கிளப்பியதில் இருந்தே விஜய் மீது ரஜினி ரசிகர்கள் செம கோபத்தில் இருந்து வருகின்றனர். அதுபோல், விஜய் ரசிகர்களும் ரஜினியை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

இப்போது லியோ படம் ரிலீஸ் ஆன நிலையில், இதை நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு ரஜினி ரசிகர்கள் கிண்டலடிக்க துவங்கியுள்ளனர். பீஸ்ட் என்ற படத்தை இயக்கிய நெல்சனுக்கு, ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை ரஜினி கொடுத்து, மாஸ் டைரக்டர் என்ற பெயர் நெல்சனுக்கு கிடைத்தது. அதுபோல், லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கும், ரஜினி 171 படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக தலைவர் ரஜினி கொடுப்பார். நெல்சனை காப்பாற்றியது போல, லோகேஷையும் தலைவர் ரஜினி காப்பாற்றுவார் என, சோஷியல் மீடியாவில், ரஜினி ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்