- Advertisement -
Homeபொழுதுபோக்குபர்ஸ்ட் ஆப் அவரோடது, செகண்ட் ஆப் இவரோடது, ஆளுக்கு பாதியாக பிரிச்சு, ரசிகர்களை தலையை பிச்சிக்க...

பர்ஸ்ட் ஆப் அவரோடது, செகண்ட் ஆப் இவரோடது, ஆளுக்கு பாதியாக பிரிச்சு, ரசிகர்களை தலையை பிச்சிக்க வெச்சுட்டாங்க – வைரலாகுது லியோ ரிவ்யூ

- Advertisement -

தமிழகம் உள்பட ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் நேற்று, லியோ படம் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் லியோவை ரசிகர்கள் கோலாகலமாக வரவேற்றனர். பட்டாசுகள் வெடித்து, மேளதாளம் முழங்க நடனமாடி, விஜய் கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து, ஏகப்பட்ட அலப்பரைகளில் ரசிகர்கள் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பல இடங்களில் தியேட்டர்களின் முன் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம் திரண்டதால், போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு, ரசிகர்களை ஒழுங்குப்படுத்தினர். தமிழகத்தில் காலை காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லைகளுக்கு அருகில் உள்ள தமிழக விஜய் ரசிகர்கள், அங்கு சென்று நேற்று, காலை காட்சி பார்த்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையே, லியோ படத்துக்கு துவக்கத்தில் இருந்த நல்ல விமர்சனம், மதியத்துக்கு பிறகு அப்படியே டோட்டலாக மாறிவிட்டது. படத்தில் பிளஸ்களை காட்டிலும், மைனஸ்களே அதிகமாக இருப்பதை, பொதுவான சினிமா ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் கடுமையாக விமர்சிக்க துவங்கி விட்டனர்.

படத்தில் பின்னணி இசை, சண்டை காட்சிகள், விஜய், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் போன்றவர்களின் நல்ல நடிப்பை தவிர, படத்தில் முக்கிய அம்சங்கள் எதுவும் பாராட்டும்படியாக இல்லை. குறிப்பாக திரைக்கதை ஓட்டம் முதல் பாதியில் வேகமாக உள்ளது. பின்பாதியில் படம் மிக மெதுவாக நகர்கிறது. விஜய் – திரிஷா குடும்ப காட்சிகள், சீரியல் பார்ப்பது போல உள்ளதாக விமர்சிக்கின்றனர்.

விஜய் கெட்டப்பில் கூட இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். குறிப்பாக அவரது விக், அவரது முக தோற்றத்தையே மாற்றி விட்டது. அது பார்க்கும்படியாக, ரசிக்கும்படியாக இல்லை. இதை குழந்தைகள், பெண்கள் எப்படி ரசிப்பார்கள் என்பதை கூட விஜய், படத்தின் இயக்குநர் லோகேஷ் கவனிக்காமல் விட்டு இருப்பது, பேசும் பொருளாகி விட்டது.

குறிப்பாக, லியோ திரைக்கதையில் இடைவேளைக்கு பிறகு பெரிய புத்திசாலித்தனமோ, சுவாரசியமோ இல்லை. அந்த அளவுக்கு படத்தின் இரண்டாம் பாதி மிக, மிக மெதுவாக உள்ளது. அதிலும் எல்சியு காட்சிகளின் இணைப்பு மெகா சொதப்பல் என்கின்றனர். ஒருவேளை படத்தின் பாதிவரை லோகேஷ் கனகராஜ் திரைக்கதை எழுதி இருப்பார். அதற்கு பிறகு, இரண்டாம் பாதியை, அவரது நெருங்கிய நண்பர் ரத்னக்குமார் எழுதியிருப்பாரோ என, விமர்சகர்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

சற்று முன்