- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்கலான் படத்தின் ரப் காப்பியை பார்த்த இயக்குநர் - படம் பார்த்த பின்பு அவர் மற்றவர்களிடம்...

தங்கலான் படத்தின் ரப் காப்பியை பார்த்த இயக்குநர் – படம் பார்த்த பின்பு அவர் மற்றவர்களிடம் சொன்னது என்ன தெரியுமா?

- Advertisement -

கணிசமான லாபத்தை மட்டுமே எதிர்பார்த்து, கமர்ஷியல் படங்களை மட்டுமே எடுத்த கோடிக்கணக்கில் லாபம் பார்க்கிற இயக்குநர்கள் உள்ளனர். அதே போல், கமர்ஷியல் படங்களில் நடித்து, அதிக லாபம் அடைகிற நடிகர்களும் அதிகளவில் உள்ளனர். இதற்கு முக்கிய உதாரணமாக ரஜினிகாந்த், விஜய், அஜீத் போன்றவர்கள் நடிக்கும் கமர்ஷியல் படங்களை சொல்லலாம்.

ஆனால், காலத்துக்கும் பேசப்படும் படங்களாக கலைச்சான்றுகளாக நல்ல படங்களை தர வேண்டும் என நினைக்கும் இயக்குநர்கள் சிலர் உள்ளனர். பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் அத்தகைய படங்களை தரவே விரும்பினர். அதுபோல், மலையாளத்தில் இதுபோன்ற படங்களை தர விரும்பும் இயக்குநர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.

தமிழ் சினிமாவில் இப்போதைய இயக்குநர்களில் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் கமர்ஷியலை கடந்து, தரமான கலை படைப்புகளை தர வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கின்றனர். இந்தியன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களை அவர்கள் எடுத்திருந்தாலும், கமர்ஷியல் கடந்து அவைகள், கலை படைப்புகளை மக்களை சென்றடையவில்லை.

இப்போது இயக்குநர் பா. ரஞ்சித் அந்த வரிசையில், தங்கலான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இதில் சியான் விக்ரம், ஆதிவாசி கேரக்டரில் நடித்திருக்கிறார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்த பா.ரஞ்சித் ரஜினிகாந்த் நடித்த காலா, கபாலி படங்களை இயக்கி பெரிய வெற்றிகளை பெற்றவர்.

தங்கலான் படம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிக அதிகமாக ஆர்வத்தை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றோ, நாளையோ இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், தங்கலான் படத்தின் ரப் காப்பியை பார்த்த இயக்குநர் பா. ரஞ்சித் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தான் நினைத்து எழுதியதை காட்டிலும், படம் மிக மிக சிறப்பாக வந்திருப்பதாகவும், இந்த சிறப்பான படத்தை இயக்கிய வகையில், சர்வதேச அளவில் நல்ல இயக்குநர் அங்கீகாரத்தை எனக்கு பெற்றுத் தரும் என்றும், படக்குழுவைச் சேர்ந்த சிலரிடம் ஆத்மார்த்தமாக தெரிவித்து இருக்கிறார். கமர்ஷியல் வெற்றியை காட்டிலும், கலைப்படைப்பாக இந்த படம் பேசப்படும் என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.

சற்று முன்