- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவுக்கு கிடைத்த புதிய எம்ஜிஆர் இவர்தான்- அட இவர் பயங்கர வில்லன் ஆச்சேப்பா

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புதிய எம்ஜிஆர் இவர்தான்- அட இவர் பயங்கர வில்லன் ஆச்சேப்பா

- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து, பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை. அவரது திரைப்படங்கள் என்றென்றும், அவரை போலவே சாகாவரம் பெற்றவை. இப்போதும் நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், குடியிருந்த கோவில் படங்களை தியேட்டர்களில் திரையிட்டால், மக்கள் கூட்டம் அலைமோதும்.

இப்படி காலத்தை வென்ற கலைஞர்கள் ஒரு சிலர்தான் உண்டு. எம்ஜிஆர் சினிமாவில் மட்டுமின்றி, தமிழக அரசியலிலும் அவர் செய்த சாதனைகளை இன்றுவரை யாரும் நெருங்கியது கூட இல்லை. அமெரிக்காவில் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தமிழகத்தில் அவரது கட்சி அதிமுக வெற்றி பெற்று, அவர் ஆட்சி அமைத்தது எல்லாம், நினைத்துக்கூட பார்க்க முடியாத விந்தை, ஆனால் நடந்தது.

அரசியலில் இப்போதும், எம்ஜிஆர்தான் ஹீரோ. அவரும், அதன்பிறகு கட்சியை வழிநடத்திய ஜெயலலிதாவும் தான் இன்றும் தமிழகத்தில் அதிமுக என்ற கட்சி நிலைத்திருக்க காரணமாக இருக்கின்றனர். அப்படி ஒரு நிலையான கட்சியை, ஆட்சியை உருவாக்கி தந்து சென்றவர் எம்ஜிஆர்.

அதனால் தமிழ் சினிமா எப்போதும் எம்ஜிஆரை மறப்பதில்லை. அந்த வகையில் எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண் நடிக்கும் வா வாத்தியாரே என்ற படத்தை நலன் குமாரசாமி இயக்கி, கார்த்தி நடித்து வருகிறார். எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரண் தன் பேரன் கார்த்தி, எம்ஜிஆரை போலவே வரவேண்டும் என்று ராஜ்கிரண் ஆசைப்படுவதுதான் வா வாத்தியாரே படத்தின் மையக்கரு.

ஆனால் ராஜ்கிரண் ஆசைக்கு எதிர்மறையாக இந்த படத்தில், கார்த்தி நம்பியார் போல வில்லத்தனங்கள் செய்யும் கேரக்டரில் நடித்து வருகிறார். ஆனால், அதே வேளையில் படத்தில் இன்னொரு எம்ஜிஆர் ரசிகராக நடித்திருப்பவர் நடிகர் ஆனந்தராஜ். வில்லன் நடிகரான இவர் இந்த படத்தில் எம்ஜிஆராக மாறி நடித்திருக்கிறார்.

இயல்பிலேயே நல்ல சிவந்த நிறம் கொண்ட ஆனந்தராஜ், எம்ஜிஆர் கெட்டப்பில் சற்று தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு எம்ஜிஆர் போலவே இருக்கிறாராம். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான அவர் எம்ஜிஆர் போல உடையணித்து, அவரைப் போன்ற கெட்டப்பில் இந்த படத்தில் நடித்திருப்பதை பார்த்து, தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய எம்ஜிஆர் கிடைத்துவிட்டதாகவே யூனிட்டில் பலரும் கூறுகின்றனர். ஆனந்தராஜ் அதிமுக ஆதரவாளர் என்பது கூடுதல் தகவல்.

சற்று முன்