- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது விஜய் விக் வைத்திருக்கிறாரா?.. அவரின் ஹேர்ஸ்டைலிஷ்ட் பகிர்ந்த சீக்ரெட் இதோ

என்னது விஜய் விக் வைத்திருக்கிறாரா?.. அவரின் ஹேர்ஸ்டைலிஷ்ட் பகிர்ந்த சீக்ரெட் இதோ

- Advertisement -

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இதுவரை 67 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக பெரும் ரெஸ்பான்ஸை பெறுகிறதோ இல்லையோ வசூல் ரீதியாக பெரிய ரெஸ்பான்ஸை பெறும். கடைசியாக அவரின் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருக்கின்றன.

விஜய்யை சுற்றி இன்னொரு விமர்சனம் எழுவது என்னவென்றால் அவரது ஹேர் ஸ்டைல்தான். ஒருகாலத்தில் ஹேர் ஸ்டைலுக்காகவும் விஜய் கொண்டாடப்பட்ட்டவர்தான். ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவரது ஹேர் ஸ்டைல் ரசிகர்களை கவர தவறுவதறாக ஒரு கருத்து உண்டு. மேலும் அவர் விக் வைத்துதான் திரைப்படங்களில் தோன்றுகிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில் விஜய்யின் ஹேர் ஸ்டைலிஷ்ட் தேவ் சக்திவேல் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “தன்னுடைய ரசிகர்களுக்காக ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு லுக்கில் வர வேண்டும் என விஜய் ரொம்பவே மெனக்கெடுகிறார். ஆறு மாத காலத்திற்கு ஒரே ஹேர் ஸ்டைலில் இருக்க என்னிடம் கட்டிங்கிறுகு வரும்போதேல்லாம் எதுவுமே சொல்லமாட்டார்.

என்னிடம் அவர் சொல்வது ஒன்றே ஒன்றுதான். நீங்க பார்த்துக்கோங்க என்பதுதான் அது. அப்படி அவர் சொல்வதே எனக்கு பக்கென்று இருக்கும். பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர் ரொம்பவே கூலாக இருப்பார். சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து பார்த்து செய்யும் பொறுப்பு என் மீது விழுந்திருக்கும். எனவே அவருக்கான ஹேர் ஸ்டைலை கவனத்துடன் செய்வேன். அவருக்கு பிடித்துவிட்டார் சூப்பர் என்று பாராட்டுவார்.

லியோ படத்தில் பார்த்திபன் லுக் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. ஆனால் லியோ லுக்குக்கான கட் செய்ய சொல்லும்போது அதை வெட்டி முடித்த பிறகு பார்க்கையில் எனக்கே சந்தோஷம் தாங்கவில்லை. நிச்சயம் ரசிகர்களுக்கு திரையில் பெரிய ட்ரீட் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டேன். அதனால்தான் அவரிடம், சார் இந்த லுக்கில் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொள்கிறேன் என கேட்டு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

தளபதி 68 பூஜையில் காட்டியது படத்தில் அவருடைய லுக்கா இல்லையா என்று எனக்கு தெரியாது. அந்த லுக்கையும் நாந்தான் கட் செய்தேன். படம் வரும்போதுதான் அவரது லுக் தெரியவரும். என்னால் இதற்கு மேல் எதையும் சொல்ல முடியாது” என்றார். அவரது இந்தப் பேட்டியை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து எங்கள் தளபதிக்கு இருப்பது ஒரிஜினல் முடிதான் என கூறிவருகின்றனர்.

சற்று முன்