- Advertisement -
Homeபொழுதுபோக்கு5 நடிகர்களுக்கு ரெட் கார்டு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி, என்ன காரணம்ன்னு தெரியுமா?

5 நடிகர்களுக்கு ரெட் கார்டு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி, என்ன காரணம்ன்னு தெரியுமா?

- Advertisement -

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ் சினிமாவின் 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டுக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டதை நாம் அறிந்திருப்போம்.

“இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படம் தொடங்கியபோது அத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு வடிவேலு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என புகார் எழுந்தது. இதனால் அத்திரைப்படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கருக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதனை தொடர்ந்து தயாரிப்பாளரும் இயக்குனருமான ஷங்கர், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து வடிவேலு திரைப்படங்களில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது.

- Advertisement -

எனினும் கடந்த 2021 ஆம் ஆண்டு வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டது. அதன் பின் அவர் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”, “சந்திரமுகி 2”, “மாமன்னன்” ஆகிய திரைப்படங்களில் ஒப்பந்தமானார். இதனை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் 5 முக்கிய நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூடியது. அதில் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு கால்ஷீட் தராமல் இருக்கும் நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க அந்த கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு கால்ஷீட் தராமல் இழுத்தடிக்கும் நடிகர்களின் பட்டியலில் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, சிம்பு, அதர்வா, விஷால் ஆகிய ஐந்து நடிகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.

- Advertisement -

இதில் எஸ்.ஜே.சூர்யா மீது தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜாவும், அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் என்பவரும் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிம்புவின் மீது ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, சிம்பு, அதர்வா, விஷால் ஆகிய நடிகர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்களாம். அவர்கள் சரியான விளக்கம் அளித்தால் அவர்களின் கெரியருக்கு எந்த பிரச்சனையும் வராது எனவும் ஒரு வேளை விளக்கம் அளிப்பதில் மெத்தனப்போக்கு காட்டினாலோ அல்லது அவர்களின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்றாலோ ரெட் கார்டு கொடுக்கப்படும் எனவும் முடிவு செய்துள்ளார்களாம்.

- Advertisement -

சற்று முன்