- Advertisement -
Homeபொழுதுபோக்குநெருங்கிய நண்பனிடம் 5 மாதங்களாக பேச மறுத்த விஜய் - இந்த விஷயத்தை போய்...

நெருங்கிய நண்பனிடம் 5 மாதங்களாக பேச மறுத்த விஜய் – இந்த விஷயத்தை போய் இப்படி பெரிதுபடுத்தி இருக்கிறாரே விஜய்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருப்பவர் விஜய். அவரது படங்கள் பற்றி தகவல்கள் உடனுக்குடன் அப்டேட் ஆகி அவரது ரசிகர்கள் மத்தியில் டிரண்டிங் ஆகி விடுகின்றன. அவரது புகைப்படங்கள் உடனுக்குடன் வைரலாகி வருகின்றன. விஜய் என்றாலே, ரசிகர்கள் மத்தியில் மாஸ் கிளப்பி விடுகின்றனர்.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம், ஒரே வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூல் என்ற இமாலய சாதனையை புரிந்திருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு 20 முதல் 25 சதவீதம மட்டுமே டிக்கெட் வசூலில் பங்கு தந்திருப்பதும் ஒருபுறம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

இதற்கிடையே தனது அடுத்தபடத்தின் படப்பிடிப்பில் மிக பிஸி ஆக இருந்து வருகிறார் விஜய். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில், பரபரப்பான சண்டை காட்சிகள், படமாக்கப்பட்டு வருகின்றன, சிநேகா இந்த படத்தில், அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மகன் விஜய்க்கு மீனாட்சி சௌத்ரி ஜோடியாக நடிக்கிறார்.

நடிகர் விஜய்க்கு சினிமா துறையில் நிறைய நண்பர்கள் உண்டு. அதுவும் அவர் நடிக்க ஆரம்பித்து வளர்ந்த காலத்தில் அவருடன் நடித்தவர்களில் மிக நெருங்கிய நண்பராக இருப்பவர் சஞ்சீவ். இவரும் பத்ரி உள்ளிட்ட சில படங்களில் விஜயுடன் நண்பராக நடித்திருக்கிறார். தவிர, சீரியல்களில் மிக முக்கியமான நடிகராவும் சஞ்சீவ் வலம் வருகிறார்.

- Advertisement -

திருமதி செல்வம் சீரியலில் நடித்து, மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை, பாராட்டை பெற்றவர் சஞ்சீவ். இவரது மனைவி ப்ரீத்தி. இவரும் சீரியலில் மிக பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் ப்ரீத்தி சஞ்சீவ் அளித்த ஒரு பேட்டியில் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது, ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படம் வெளியானது. அந்த படத்தின் லான்சிங் நடந்த போது, அதில் பங்கேற்குமாறு சஞ்சீவை, விஜய் அழைத்திருந்தார். ஆனால், திருமதி செல்வம் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால், அந்த நிகழ்ச்சிக்கு சஞ்சீவ் போக முடியவில்லை. இதனால் அப்செட் ஆன விஜய், கிட்டத்தட்ட 5 மாதங்கள் வரை, சஞ்சீவ் உடன் பேசவில்லை. அதன்பிறகு சகஜமாக பேசிவிட்டார், என்று கூறியிருக்கிறார் ப்ரீத்தி சஞ்சீவ்.

- Advertisement -

சற்று முன்