நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். தற்போது அன்னபூரணி என்ற அவரது 75 வது படத்தில், நடித்து வருகிறார். பிராமண பெண்ணான அவர், அசைவம் சமைக்கும் சமையல் போட்டியில் கலந்துக்கொள்ள தன்னை தயார் செய்துக் கொள்வதுதான் கதை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான அன்னபூரணி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் கூட அதை உறுதிப்படுத்தும் விதமாகவே, காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. பிராமணர் ஒருவரது வீட்டில், பெரியவர் சந்தியாவந்தனம் செய்கிறார். மாமி ஆரத்தி தட்டு காட்டி, சுவாமி படங்களுக்கு பூஜை செய்கிறார். ஆனால், கட்டிலில் பிராமண பெண்ணாக அமர்ந்திருக்கும் நயன்தாரா, ஒரு புத்தகத்தில் மற்றொரு புத்தகத்தை வைத்து, அதில் இருக்கும் சிக்கன் லெக்பீஸ்களை பார்த்து ரசிக்கிறார்.
ஆக, அன்னபூரணியின் கதை இதுதான் என்பது தெளிவாகிறது. இந்த படத்தில், ராஜா ராணி படத்துக்கு பிறகு, நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கிறார். இந்த படத்தை புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் டைரக்ட் செய்கிறார். இது நயன்தாராவின் 75வது படம் என்பதால், அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையே நயன்தாரா குறித்து ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, அன்னபூரணி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு காலையில் வரும் நயன்தாரா, சில மணி நேரங்களிலேயே ஒரு மாதிரியாக அப்செட் ஆகி விடுகிறார். நெர்வஸ் ஆக அவர் இருப்பதை பார்க்கும் படக்குழுவினர் என்ன செய்வதென்று திகைத்து போய் விடுகின்றனர்.
அடிக்கடி டைரக்டரிடம் செல்லும் நயன்தாரா, சீக்கிரம் டக் டக் என்று படத்தின் காட்சிகளை ஷூட் செய்து முடியுங்கள், மாலை 5 மணிக்குள் எல்லாவற்றையும் முடித்து என்னை அனுப்பி விடுங்கள் என, டைரக்டர் உள்ளிட்ட படக்குழுவினரை டார்ச்சர் செய்கிறார். குறிப்பாக, மாலை 4 மணி ஆகி விட்டாலே, அவர் டோட்டலாக மாறி, கேமரா முன் நடிக்கும் ஆர்வமே இல்லாமல் கான்சன்ட்ரேசன் காட்டாமல் நடித்துக் கொடுக்கிறார்.
அதாவது, வீட்டில் இருக்கும் தனது இரட்டை குழந்தைகள் மீதான தாய் பாசத்தால் வீட்டுக்குச் செல்ல, நயன்தாரா தவிக்கிறார் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ரூ. 12 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு இப்படி நயன்தாரா பொறுப்பின்றி நடந்துக்கொள்வதும், படக்குழுவினரை டார்ச்சர் செய்வதும், பலருக்கும் பயங்கர டென்சனை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள் தான் முக்கியம் என்றால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி பள்ளி, கல்லூரி செல்லும் வரை வீட்டில் இருந்துவிட்டு, பிறகு படத்தில் நடிக்க வருவதுதானே என பலரும், கிண்டலடித்து வருகின்றனர்.





