- Advertisement -
Homeபொழுதுபோக்குராக்காயி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது ரஜினி பட நடிகையா? திடீரென நயன்தாரா அதில் நாயகியாக...

ராக்காயி படத்தில் முதலில் நடிக்க வேண்டியது ரஜினி பட நடிகையா? திடீரென நயன்தாரா அதில் நாயகியாக மாறியது எப்படி? – வெளியான பின்னணி தகவல்!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் தனுஷ் குறித்த நயன்தாராவின் அறிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தனது திருமணம், வாழ்க்கை பதிவுகளுடன் உருவான நயன்தாரா; பியான்ட் த பேரி டேல் என்ற அந்த ஆவணப் படத்தில் நானும் ரவுடிதான் வீடியோ காட்சிகளை பயன்படுத்த தனுஷ் தடுத்தார் என நயன்தாரா கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

நானும் ரவுடிதான் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தனுஷூக்கு, இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் சேர்ந்து பயங்கர நஷ்டத்தை ஏற்படுத்தினர். அந்த படத்தை ஷூட்டிங் செய்யும் போது படத்தில் கவனம் செலுத்தாமல், காதலில் அவர்கள் கவனம் செலுத்தியதால் ரூ. 10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு தனுஷ் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

- Advertisement -

இப்போது, நயன்தாரா ஆவணப்படத்தை ரூ. 80 கோடிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விற்று சம்பாதித்த நிலையில், அதில் தனது தயாரிப்பு படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்த தனுஷ் மறுப்பு தெரிவித்து, ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பீியது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் நயன்தாரா, தனுஷ் விவகாரத்தில் கங்குவா பட விமர்சனங்கள் அமுங்கிப் போனதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. அதே போல் இத்தனை பிரச்னைகளுக்கு மத்தியில் டெல்லியில் நயன்தாரா தன் பிறந்த நாளை கொண்டாடினார். அவர் நடிக்கும் ராக்காயி என்ற படத்தின் அறிமுக போஸ்டரும் வெளியாகி வைரலானது.

- Advertisement -

இயக்குனர் அருண் மாதேஸ்வரனிடம் ஸ்கிரிப்ட் ஒர்க்கில் உதவியாளராக இருந்தவர் செந்தில் நல்லாசாமி. இவர் சில ஆர்ட் படங்களும் எடுத்தவர். அவர்தான் அறிமுக இயக்குனராக ராக்காயி படத்தை இயக்க உள்ளார். பீரியட் படமான ராக்காயி படத்தில், குழந்தை பாசம் மிக்க ஒரு தாயாக ஒரு சமூகத்தை நாயகி எதிர்த்து போராடுவதுதான் கதை.

முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது வேட்டையன் படத்தில் நடித்திருந்த நடிகை மஞ்சுவாரியார்தான். அவரும் கதையை கேட்டவுடன் உடனே ஓகே சொல்லிவிட்டார். ஆனால் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம். இதுபோன்ற வலிமையான கதையில் நயன்தாரா போன்ற ஆளுமை மிக்க நடிகை நடித்தால்தான் பெரிய அளவில் பேசப்படும். பெரிய வெற்றியை பெற முடியும். போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியும் என பிறகு நயன்தாராவிடம் பேசி இந்த படத்தில் நடிக்க கமிட் செய்ததாக, மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்