லியோ படத்தின் வெற்றி விழாவில், பேசபட்ட சில விஷயங்கள் இப்போது சமூக வலைதளங்களில் முக்கிய பேசு பொருளாக மாறி இருக்கின்றன. அதிலும் நண்பன் என்ற பெயரில் கூட இருந்தே ரத்னக்குமார் குழி பறித்தாரா என்ற பகீர் கேள்வியும், அதுபற்றிய தகவலும் இப்போது வந்திருக்கிறது.
லியோ படத்தில், கோ டைரட்டராக பணிபுரிந்தவர் ரத்னக்குமார். இவர், லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மிக நெருங்கிய நண்பர். விக்ரம் படத்துக்கு, கதைவசனம் எழுதியது ரத்னக்குமார்தான். இவர் மேயாத மான், ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரத்னக்குமார், கழுகு உயர பறந்தாலும் பசி எடுத்தால், உணவுக்காக கீழே வந்துதான் ஆக வேண்டும் என்று பேசினார். இது கழுகு – காக்கா கதை சொன்ன ரஜினியை வம்புக்கு இழுப்பது போல் இவரது பேச்சு இருந்தது.
லியோ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவது ரஜினி 170 படத்தை தான். அப்படி என்றால், ரஜினி கோபத்தை தனது நண்பன் லோகேஷ் கனகராஜ் பக்கம் திருப்பும் விதமாக, ரத்னக்குமார் இப்படி பேசி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதுமட்டுமின்றி லியோ படத்தில், விஜய் பேசிய அந்த கெட்ட வார்த்தை டிரெய்லரில் வந்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. லோகேஷ் கனகராஜூக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. படத்தின் கோ டைரட்டரான ரத்னக்குமார்தான் அந்த வசனத்தை எழுதி இருப்பார் என்பதும் இப்போது தெளிவாக உறுதியாகிறது.
தனது நண்பன் லோகேஷ் கனகராஜின் அபார வளர்ச்சியை பொறுக்க முடியாமல், அவர் கூடவே இருந்துக்கொண்டு இப்படி உள்ளடி வேலைகளில், ரத்னக்குமார் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆப்பு வைக்கும் விதமாக திட்டமிட்டு இப்படி செய்வதை, லோகேஜ் கனகராஜ் இன்னும் உணராமல் அவரை நம்பிக்கொண்டு இருக்கிறார் என, பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.





