- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஒரு சீன், அந்த ஒரு மூவ்மென்ட், அப்படி ஒரு முகபாவத்தை பார்த்து அசந்து போயிட்டேன்...

அந்த ஒரு சீன், அந்த ஒரு மூவ்மென்ட், அப்படி ஒரு முகபாவத்தை பார்த்து அசந்து போயிட்டேன் – பிரபுதேவாவை இப்படி அசர வைத்த நடிகர் இவரா?

- Advertisement -

நடிகர் பிரபுதேவா, தமிழ் சினிமாவில் சிறந்த நடன இயக்குநராக, சிறந்த நடனக் கலைஞராக, சிறந்த நடிகராக, சிறந்த இயக்குநராக தன்னை அடையாளம் காட்டியவர். இவரது தந்தை சுந்தரம் மாஸ்டர் ஒரு பிரபல நடன இயக்குநர். இவரது அண்ணன் ராஜூ சுந்தரமும் ஒரு நடன இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் பாடல் காட்சிகளில் மட்டுமே, தோன்றி நடனமாடியவர் பிரபுதேவா. பிறகு காதலன் படத்தில் ஹீரோவாக நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.

- Advertisement -

ராசய்யா, பெண்ணின் மனதை தொட்டு, உள்ளம் கொள்ளை போகுதே, மிஸ்டர் ரோமியோ, விஐபி, லவ் பேர்ட்ஸ் போன்ற படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஒரு கட்டத்தில் விஜய் நடித்த போக்கிரி படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. ஆனால், விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய வில்லு படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

இந்தியில் ரவுடி ரத்தோர் உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பிரபுதேவா, பல படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார். இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் பிரபுதேவா, விஜய் உடன் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் பிரபுதேவா அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியதாவது, எனக்கு நடிகர் வடிவேலுவை மிகவும் பிடிக்கும். அவரை ஒரு மனிதராக பார்க்காமல், கார்ட்டூன் போலவே அவரை பார்ப்பேன். அவரிடம் ஜாலியாக நடந்துக்கொள்வேன். அவரது தலைமுடியை பிடித்து இழுப்பேன். சட்டை பிடித்து இழுப்பேன். தண்ணீரை அவரது தலையில் கொட்டுவேன். அவர் ஒன்றுமே கண்டுகொள்ள மாட்டார். அவர் யாரிடமாவது பேசிக்கொண்டிருந்தால், நான் அப்படி செய்வதை அவர் பார்த்தால், அவன் அப்படித்தான், நீங்க பேசுங்க என்பார்.

சமீபத்தில், மாமன்னன் படத்தில் அவரது நடிப்பை பார்த்தேன். நின்றால், பார்த்தால், திரும்பினால் அவரை பார்த்தாலே சிரிப்பாக தான் இருக்கும். ஆனால், மாமன்னன் படத்தில், ஒரு காட்சியில் உதயநிதி பைக்கை ஓட்டிச் செல்ல, வடிவேலு அவருக்கு பின்னால் அமர்ந்திருப்பார். அப்போது அவரது முகபாவம், அந்த சீன் பார்த்து அசந்து போய்விட்டேன். மிகச் சிறந்த அபூர்வ கலைஞர் வடிவேலு என பாராட்டி இருக்கிறார் பிரபுதேவா.

- Advertisement -

சற்று முன்