- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைந்த நடிகர்கள் நான்கு பேர் மீண்டும் திரையில் தோன்றும் ஒரு பிரமாண்டமான படம் - அடுத்த...

மறைந்த நடிகர்கள் நான்கு பேர் மீண்டும் திரையில் தோன்றும் ஒரு பிரமாண்டமான படம் – அடுத்த ஆண்டு ஸம்மர் ஸ்பெஷலாக ரிலீஸ்

- Advertisement -

தமிழ் சினிமாவில், பல நடிகர்கள் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்து விடுகின்றனர். ஹீரோக்களை மட்டுமின்றி காமெடி, குணச்சித்திர வேடங்களில் கூட பலரது நடிப்பு, ரசிகர்களை மிகவும் கவர்ந்து விடுகிறது. அப்படி சிறப்பான உயரத்தை தொட்டுவிடும் அந்த சூப்பர் நடிகர்கள், காலத்தின் கோலத்தால் மண்ணை விட்டு மறைந்து விடுகின்றனர்.

தமிழ் சினிமாவில், சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். இவரது காமெடி காட்சிகளில், யதார்த்தம் நிறைந்திருக்கும். மனிதர்களின் முட்டாள்தனங்களை, மூடநம்பிக்கைகை சுட்டிக் காட்டி, பல படங்களில் காமெடி சீன்களில் நடித்திருப்பார். அப்துல் கலாம் மீது அபிமான கொண்ட இவர், பல லட்சம் மரக்கன்றுகளை, சொந்த முயற்சியால் நட்டவர்.

- Advertisement -

நடிகர் மாரிமுத்து, உதவி இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் வந்து பின் புலிவால், கண்ணும் கண்ணும் என 2 படங்களை டைரக்ட் செய்தார். தமிழ் படங்களில் வில்லன், குணச்சித்திர கேரக்டர்களில் நடித்த அவர், எதிர்நீச்சல் என்ற சீரியலில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்தார்.

அதே போல் இயக்குநர் மனோபாலா, நடிகராகவும் பிற்காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். பல படங்களில் சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தினார். அதே போல், மலையாளத்தில் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர் நெடுமுடிவேணு. இவர், சில தமிழ் படங்களிலும் நடித்திருந்தார்.

- Advertisement -

நடிகர்கள் விவேக், மனோபாலா, மாரிமுத்து, நெடுமுடிவேணு என, நான்கு பேருமே இப்போது இல்லை. நான்கு பேருமே இந்த மண்ணை விட்டு மறைந்துவிட்டனர். இதில், விவேக் 59 வயதிலும், மாரிமுத்து 56 வயதிலும் மறைந்தனர். மற்ற இருவரும் 70 வயதுகள் என்ற நிலையில், முதுமையால் உயிரிழந்தனர்.

நடிகர் விவேக், கமலுடன் நடித்த ஒரே படம் இந்தியன் 2. ஆனால் அந்த படத்தில் சில நாட்களே நடித்த நிலையில் அவர் உயிரிழந்தார். மனோபாலா, மாரிமுத்துவும், இந்தியன் 2 வில் நடித்த நிலையில் மறைந்தனர். இந்தியன் முதல் பாகத்தில் நெடுமுடி வேணு நடித்திருந்தார். இறந்த இந்த 4 நடிகர்களும், தங்களது கடைசி படமான இந்தியன் 2 படத்தில் தோன்ற உள்ளனர். இந்த படம் வரும் 2024ல் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

சற்று முன்