- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழகத்தில் காத்து வாங்கும் கல்கி திரைப்படம்... ஆனால் உலக அளவில் இத்தனை கோடி ரூபாய் வசூல்...

தமிழகத்தில் காத்து வாங்கும் கல்கி திரைப்படம்… ஆனால் உலக அளவில் இத்தனை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாமே… அதிகாரப்பூர்வ அறிவிப்பால் நம்பித்தான் ஆகணும் போல…

- Advertisement -

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரம்மாண்ட திரைப்படங்களில் நடிப்பதையே கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். ஆனால் இந்த திட்டம் அவருக்கு கை கொடுக்கவில்லை என்று அடித்துக் கூறலாம். ஆனால் அதன் பிறகு வெளியான எந்த ஒரு திரைப்படமும் அவருக்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுக்கவில்லை.

 

- Advertisement -

குறிப்பாக ஆதி புரூஸ் திரைப்படம், அவரது இமேஜை சீர்குலைத்தது. படத்திற்கு எந்த தரப்புமே ஆதரவு தெரிவிக்காததால், கடைசியில் அது ட்ரோல் மெட்டீரியல் ஆகியது. அந்தப் படத்தின் மூலம் இணையத்தில் பிரபாஸை கேலி செய்யாதவர்களை இருக்க முடியாது என்று கூறலாம். மட்டமான கிராபிக்ஸ் பணிகளால், ஆதி புருஸ் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

 

- Advertisement -

இந்த படத்திற்குப் பிறகு, பிரபாஸிற்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்த திரைப்படம் சலார். கே ஜி எஃப் இயக்குனர் பிரசாத் நீல் எடுத்திருந்த இந்த திரைப்படத்தில், மலையாள நடிகர் பிரித்விராஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

 

இருப்பினும் தனது முந்தைய திரைப்படங்களால் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட பிரபாஸுக்கு, சலார் திரைப்படம் சற்று ஆறுதலை தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு, பிரபாஸ் நடித்த மற்றொரு பிரம்மாண்ட திரைப்படம் தான் கல்கி. நாக் அஸ்வின் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், அறிவியல் மற்றும் புராணக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.

 

சந்தோஷ் நாராயணன் தான் இதற்கு இசையமைத்திருந்தார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதாணி என நட்சத்திரங்கள் அடுக்கிக் கொண்டே போனதால் கல்கி படத்தின் மீது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் இந்த திரைப்படம் வெளியானது.

 

இதில் கமல்ஹாசன் கதாபாத்திரத்தை பலரும் வரவேற்பு தெரிவித்து பாராட்டினார்கள். படத்தின் மேக்கிங் மிக அட்டகாசமாக இருந்தாலும், திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டது ரசிகர்களை கொட்டாவி விட செய்தது. இதனால் தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும் தெலுங்கு சினிமாவில் கல்கிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். இதனால் உலக அளவில் இந்த திரைப்படம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

- Advertisement -

சற்று முன்