- Advertisement -
Homeபொழுதுபோக்குடிவிட்டர் பக்கத்தில் வம்பு செய்யும் இசையமைப்பாளர் தமன்? விளைவு என்ன ஆச்சுன்னு தெரியுமா?

டிவிட்டர் பக்கத்தில் வம்பு செய்யும் இசையமைப்பாளர் தமன்? விளைவு என்ன ஆச்சுன்னு தெரியுமா?

- Advertisement -

இசையமைப்பாளர் தமன், தற்போது தெலுங்கில் டாப் இசையமைப்பாளராக வலம் வருகிறார். இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் தமன் திடீரென நேற்று ஒரு வாழைப்பழத்தின் புகைப்படத்தை டிவிட் செய்து அதில், “வயிற்றெரிச்சல் இருப்பவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது” என குறிப்பிட்டிருந்தார். அதே போல் நேற்று ஒரு கிளாஸ் நிறைய மோர் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி அதில், “நாளை முதல் எனது ஸ்டூடியோவில் இலவசமாக மோர் விற்கப்போகிறேன். வயிற்றெரிச்சல் உடையவர்களுக்கு மோர் மிகவும் சிறந்தது” என்று குறிப்பிட்டிருந்தார். பார்வையாளர்கள் பலரும் தமன் ஏன் இப்படி சம்பந்தமே இல்லாமல் டிவிட் போடுகிறார் என்று குழப்பமடைந்தனர்.

- Advertisement -

 

- Advertisement -

இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, தனது வலைப்பேச்சு வீடியோவில் தமன் இவ்வாறுப் டிவிட் செய்ததன் பின்னணியை குறித்து கூறியுள்ளார். அதாவது தமன் தற்போது பல தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் ஒரு திரைப்படத்திற்காக இசையமைக்க ஹைதராபாத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஷூட் ரூமில் தங்கியிருக்கிறார்.

எப்போதும் அவர் அந்த ஹோட்டலில் ஷூட் ரூமில் தங்குவதுதான் வழக்கமாம். அதன் பின் அந்த தயாரிப்பாளரிடம் ஹோட்டலுக்கான பில்-ஐ தமன் தந்திருக்கிறார். அந்த பில்-ஐ பார்த்ததும் தயாரிப்பாளர் டென்ஷன் ஆகிவிட்டாராம். அதாவது 40 லட்ச ரூபாய் பில் வந்திருந்ததாம்.

உடனே தயாரிப்பாளர் தமனிடம் சென்று, “நீங்கள் ஹைதராபாத்திற்கு வந்து ஒரே நேரத்தில் ஐந்து படங்களுக்கு வேலை பார்க்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும் இந்த பில் தொகையை பிரித்துத்தானே கொடுக்க வேண்டும். நீங்கள் ஏன் மொத்தமாக என் தலையில் கட்டுகிறீர்கள்?” என கேட்கப்போய் இருவருக்குள்ளும் வாக்குவாதம் வந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் அந்த தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தார்களாம். தான் மிகப் பெரிய இசையமைப்பாளராக வளர்ந்துவிட்டதனால்தான் இவர்கள் பொறாமை படுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்களை தாக்கி தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வாறு டிவிட் செய்தாராம் தமன். இவ்வாறு ஒரு தகவலை பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தின் இடையே புதிதாக உருவாகி வரும் “குண்ட்டூர் காரம்” என்ற மகேஷ் பாபுவின் திரைப்படத்தில் இருந்து தமன் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் வெளிவருகிறது.

- Advertisement -

சற்று முன்