- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனுடன் மீண்டும் நான் சேர்ந்து நடிப்பதா? - ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து நடிகர் சூரி இப்படி...

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நான் சேர்ந்து நடிப்பதா? – ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து நடிகர் சூரி இப்படி சொல்லி இருக்கிறாரே?

- Advertisement -

நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் துணை நடிகராக தன் வாழ்க்கையை துவங்கியவர். ஆரம்பத்தில் சூரி நடித்த படங்களில் சில விநாடிகள், சில நிமிடங்கள் திரையில் தோன்றி மறைந்தவர். பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல், ஜெயம் ரவி நடித்த தீபாவளி ஆகிய படங்களில் நடிகர் சூரி, சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருக்கிறார்.

பிறகு வெண்ணிலா கபடிக்குழு, பரோட்டா சாப்பிடும் போட்டி தான் சூரிக்கு மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன்பின் குள்ளநரிக் கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மருது, ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை, கடைக்குட்டி சிங்கம், பூஜை, அண்ணாத்த, வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன், ஜில்லா என பல படங்கள் சூரியை மிகச்சிறந்த காமெடி நடிகராக மாற்றி, ரசிகர்களின் முழு ஆதரவை பெற்றார்.

- Advertisement -

இந்நிலையில், காமெடி நடிகரான சூரியை ஹீரோ ஆக்கியவர் இயக்குநர் வெற்றிமாறன். விடுதலை படம் மூலம் ஒரு ஹீரோ அந்தஸ்துக்கு வந்துவிட்ட அவர், இப்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். விடுதலை 2 பாகமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் சூரி அளித்துள்ள ஒரு நேர்காணலில் கூறியதாவது, காமெடி நடிகனை, ஹீரோவாக நம்பி எனக்கு இந்த வாய்ப்பை தந்துள்ளனர். அந்த பொறுப்புடன் நான் சிறந்த முறையில் நடித்து, அவர்களுக்கு வெற்றியைத் தர வேண்டும். நான் எப்போதும் மக்கைள சந்தோஷப்படுத்தும் ஒரு நடிகனாக இருக்க வேண்டும். எனக்கென்ற ஒரு தனித்துவத்தை நான் வெளிப்படுத்துவது மிக முக்கியம்.

- Advertisement -

முதலில் காமெடி நடிகராக இருந்தேன். இப்போது ஹீரோவாக நடித்து வருகிறேன். நாளை நான் என்னவாக போகிறேன் என்று எனக்கே தெரியாது. எந்த வாய்ப்பு கிடைத்தாலும், அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு என் பயணத்தை தொடர்கிறேன். காமெடியனா மக்களை சந்தோஷப்படுத்த, எதையாவது யோசிக்க வேண்டும். ஆனால், ஹீரோ என்றால் ஜாலியாக இருக்கிறது. இயக்குநர்கள் சொல்வதை உள்வாங்கி நடித்தால் மட்டுமே போதும்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போல, சிவகார்த்திகேயனுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பது எப்போது என ரசிகர்கள் பலரும் என்னிடம் ஆர்வமாக கேட்கின்றனர். விரைவில் இருவரும் சேர்ந்து நடிப்போம். கடவுள் புண்ணியத்தில் நான் இந்தளவுக்கு உயர காரணம், சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடித்த படங்கள்தான், என்று கூ;றியிருக்கிறார் நடிகர் சூரி.

- Advertisement -

சற்று முன்