- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க கேவலமான கேமுக்கு என் பெயரை பயன்படுத்தாதீங்க -பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரக்சிதா...

உங்க கேவலமான கேமுக்கு என் பெயரை பயன்படுத்தாதீங்க -பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரக்சிதா மகாலட்சுமி

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 இப்போது 40 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் ஒயில்டு கார்டு என்ட்ரியாக 5 போட்டியாளர்கள், பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர். இதில் சீரியல் நடிகர் தினேஷ் ஒருவர். இவர், டிவி சீரியல் நடிகை ரக்சிதா மகாலட்சுமியின் கணவர்.

தினேஷ், ரக்சிதா மகாலட்சுமி இருவரும் டிவி சீரியல் ஒன்றில் நடித்த போது, காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மீண்டும் தினேஷ் உடன் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை என்ற நிலையில்தான் இதுவரை ரக்சிதா மகாலட்சுமி இருந்து வருகிறார்.

- Advertisement -

கடந்த பிக்பாஸ் சீசன் 6ல், இதே போல் பிக்பாஸ் வீட்டில் ஒரு போட்டியாளராக ரக்சிதா மகாலட்சுமி கலந்துக்கொண்டார். இப்போது, பிக்பாஸ் 7வது சீசனில் அவரது கணவர் தினேஷ் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். தினேஷின் செயல்பாடுகள், பிக்பாஸ் வீட்டுக்குள் பாராட்டை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மாயா உள்ளிட்ட சிலர், தினேஷிடம், அவரது திருமண வாழ்க்கை குறித்து பேச திட்டமிடுகின்றனர். குறிப்பாக தினேஷ், ரக்சிதா மகாலட்சுமியின் திருமணம், காதல், இப்போது கருத்து வேறுபாடு பிரிந்திருப்பது குறித்து பேச திட்டமிடுவது போன்ற பிரமோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரக்சிதா மகாலட்சுமி, கடும் கோபத்தில் இருக்கிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள், தேவையின்றி தனது திருமண வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதை அவர் விரும்பவில்லை. அதனால், இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து காட்டமான பதிவை ஒன்றை செய்துள்ளார். அது இப்போது வைரலாகி வருகிறது.

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, பிக்பாஸ் வீட்டுக்குள் பேச யாருக்கும் உரிமை இல்லை. வலியை அனுபவித்தவர்களுக்கு தான் வேதனை தெரியும். எல்லோரும் கருத்து சொல்ல என் வாழ்க்கை ஒன்றும் பொது பிரச்னை இல்லை. உங்களுடைய கேவலமான கேம் பிளானுக்காக என் பெயரை பயன்படுத்தாதீங்க, என்று ரக்சிதா மகாலட்சுமி கோபமாக பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்