- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... அஜித் மற்றும் சூர்யா படங்களுக்கு இன்னும் அந்த விஷயம் நடக்கவே இல்லையா... போனியே ஆகாத...

என்னது… அஜித் மற்றும் சூர்யா படங்களுக்கு இன்னும் அந்த விஷயம் நடக்கவே இல்லையா… போனியே ஆகாத படத்துக்கா இப்படி கூவுனாங்க…

- Advertisement -

கடந்த ஏப்ரல் மாதம் அஜித்குமாருக்கு குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் இதனை இயக்கியிருந்தார். திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் படத்தில் நடித்திருந்தனர். ஒரே ஒரு காட்சியில் மட்டும் யோகி பாபு வந்து போனார். ஜிவி பிரகாஷ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

முழுக்க முழுக்க மசாலா திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருந்தது. எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல், ரெட்ரோ பாடல்களை அதிகமாக வைத்து ஒரு கலவையாக இந்த திரைப்படத்தை ஆதிக் கொடுத்திருந்தார். இதன் காரணமாகவே இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

ஒன்று அஜித்தையே எல்லாரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இல்லையென்றால் அவரே அவை புகழ்ந்து கொள்கிறார் இதுதான் இந்த திரைப்படத்தில் இருக்கிறது என்று பலரும் கமெண்ட் அடித்தனர். ஆனால் இது வசூலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த திரைப்படம் வசூல் குவித்து சாதனை படைத்தது.

இதே போல கடந்த மே மாதம் சூர்யாவுக்கு ரெட்ரோ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இதனை இயக்கியிருந்தார். பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், விபின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

- Advertisement -

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே சந்தித்தது. குறிப்பாக இரண்டாம் பாதி, சரியாக இல்லை என்று பலரும் கூறினர். ஆனால் அதீதமாக இந்த திரைப்படத்தை இணையத்தில் பலரும் விமர்சித்து வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க திரையரங்குகளுக்கு செல்லும் கூட்டத்தை அப்படியே ரெட்ரோ தக்க வைத்துக் கொண்டதால், வெற்றி படமாகவே இது பார்க்கப்பட்டது.

இப்படியான சூழலில் குட் பேட் அக்லி மற்றும் ரெட்ரோ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கான சாட்டிலைட் உரிமம் இன்னும் விலை போகவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக குட் பேட் அக்லி திரைப்படத்தை ஒரு முன்னணி தொலைக்காட்சி சேனல் வாங்கியதாகவும் பின்னர் படம் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்