- Advertisement -
Homeபொழுதுபோக்குசிக்கலில் மாமன்னன் திரைப்படம், ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படி ஒரு பிரச்சனையா?

சிக்கலில் மாமன்னன் திரைப்படம், ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படி ஒரு பிரச்சனையா?

- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கிய “கர்ணன்” திரைப்படத்திற்கு பல சர்ச்சைகள் வெடித்ததை நாம் அறிந்திருப்போம். ஆனால் தற்போது அவர் இயக்கிய “மாமன்னன்” திரைப்படத்திற்கு வெளிவருவதற்கு முன்பே ஒரு பிரச்சனை எழுந்திருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆதலால் “மாமன்னன்” திரைப்படம்தான் தனது கடைசி திரைப்படம் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் உதயநிதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர், “மாமன்னன்” திரைப்படத்தின் வெளியீட்டை தடை செய்யகோரி புகார் அளித்துள்ளாராம்.

- Advertisement -

“தொட்டாச்சினிங்கி”, “சொர்ணமுகி”, “பிரியசகி”, “தூண்டில்” உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் கே.எஸ்.அதியமான். இவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து “ஏஞ்சல்” என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தின் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது.

எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் 80 சதவிகித படப்பிடிப்புதான் முடிந்திருக்கிறதாம். அதற்குள் உதயநிதி ஸ்டாலின் வேறு சில பிராஜெக்ட்டுகளில் பிசியாகி விட்டாராம். ஆதலால் தற்போது மீதமுள்ள காட்சிகளிலும் உதயநிதி நடித்துக்கொடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அதியமான் வழக்கு தொடுத்துள்ளாராம்.

- Advertisement -

“மாமன்னன்” திரைப்படம்தான் தனது கடைசி திரைப்படம் என்பதை அறிவித்திருந்த நிலையில்தான் தற்போது உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய “ஏஞ்சல்” திரைப்படத்தின் மீதி காட்சிகளில் நடித்துக்கொடுக்க வேண்டும் எனவும் அதுவரை “மாமன்னன்” திரைப்படத்தை வெளியிட கூடாது எனவும் கே.எஸ்.அதியமான் வழக்கு தொடுத்துள்ளாராம்.

“மாமன்னன்” திரைப்படம் வருகிற ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த வழக்கை தொடுத்துள்ளார் கே.எஸ்.அதியமான். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்