- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்தின் அடுத்த பட பட்டியலில் அந்த முக்கியமான இயக்குனர் இல்லையா... ஹப்பாட என உள்ளம் மகிழும்...

அஜித்தின் அடுத்த பட பட்டியலில் அந்த முக்கியமான இயக்குனர் இல்லையா… ஹப்பாட என உள்ளம் மகிழும் ஏகே ரசிகர்கள்…

- Advertisement -

அஜித் குமாரின் அடுத்த திரைப்படமான குட் பேட் அக்லி வரும் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மிகவும் ஃபேமஸான மைத்திரி மூவிஸ் நிறுவனம் தான் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.

படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அர்ஜுன் தாஸ் பிரசன்னா தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்று இருக்கிறார்கள். இந்த திரைப்படம் கேங்ஸ்டர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அண்மையில் படத்தில் இருந்து டீசர் வெளியானது.

- Advertisement -

தற்போது வரை யூடியூபில் ட்ரெண்டாகி இருக்கும் இந்த டீசர் வெளியான 24 மணி நேரத்திலேயே அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. மிக முக்கியமாக இந்த டீசரில் விண்டேஜ் அஜித்தை கண்முன் காட்டி இருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அதுவும் வாலி, வேதாளம் அமர்க்களம் பில்லா பட அஜித் கெட்டப்களை அவர் காட்டி இருந்தார்.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது தான் தற்போது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இந்த பட்டியலில் முதல் முறையாக சிறுத்தை சிவா தான் இருந்தார். விஷ்ணுவர்தனும் அவரின் அடுத்த திரைப்படத்தை இயக்க போவதாக பேச்சு அடிபட்டது.

- Advertisement -

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று விஷ்ணுவர்தனே கூறியிருந்தார். ஆனால் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கு, அவர் மட்டுமல்லாமல் ஏராளமான இயக்குனர்களும் போட்டி போடுகின்றனர். வெங்கட் பிரபு, நித்திலன் சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இருக்கின்றனர்.

இதில் தனுசும் இணைந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இதற்கான ஒன்லைனை கூறியிருக்கும் தனுஷ், ஏப்ரல் மாதம் மீண்டும் சந்தித்து அஜித்திடம் கதை கூற இருக்கிறாராம். இப்படியான சூழலில் தற்போது, சிறுத்தை சிவா மற்றும் விஷ்ணு வரதன் ஆகிய இருவர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப் போவதில்லை என்ற தகவல் உறுதியாகி இருக்கிறது. மேலும், விரைவில் அஜித்தின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்