- Advertisement -
Homeபொழுதுபோக்குகர்ணன் படத்தின் போது தணிக்கை குழுவிடம் சண்டையிட்டேன்... யாரிடமும் கூறாத வார்த்தைகளை என்னிடம் அவர்கள் பேசினார்கள்......

கர்ணன் படத்தின் போது தணிக்கை குழுவிடம் சண்டையிட்டேன்… யாரிடமும் கூறாத வார்த்தைகளை என்னிடம் அவர்கள் பேசினார்கள்… உண்மையை உடைத்த மாரி செல்வராஜ்…

- Advertisement -

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தமிழ் சினிமா இதுவரை தொடாத கதை களத்தை, முதல் திரைப்படத்திலேயே ஆணித்தரமாக அடித்து தலித் சமூக இளைஞனின் வலியை உரக்கக் கூறியிருந்தார் இயக்குனர். இதன்பிறகு தனுசை வைத்து கர்ணன் திரைப்படத்தை எடுத்தார்.

ஒரு கிராமத்தில் பேருந்து நிற்காமல் செல்வதும், அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் துணிச்சலோடு கூறியிருந்தார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற, உதயநிதி ஸ்டாலின் பகத் பாசில் வடிவேலுவை வைத்து மாமன்னனை கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்திருக்கும் அவர், தணிக்கை குழுவிடம் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து விளக்கியிருக்கிறார். இது குறித்து அவர் பேசியதாவது,

- Advertisement -

“கர்ணன் படத்தை தணிக்கைக்கு எடுத்துச் செல்லும் போது, காவல் நிலையத்தை தாக்கும் காட்சியை நீக்கச் சொன்னார்கள். ஆனால் நான் அதை ஒத்துக் கொள்ளவே இல்லை. அவர்கள் கையில் கம்பும் மட்டையும் மட்டும்தான் இருக்கிறது எனக்கூறி நான் அவர்களிடம் கேட்டேன். இதற்கு முன்னால் வந்த படங்களில், காவல் நிலையத்தில் குண்டு வெடித்து இருக்கிறது, முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் வெடித்துள்ளது இதற்கெல்லாம் அனுமதி வழங்கினீர்களே என்று கேள்வி எழுப்பினேன்.

ஆனால் அவர்கள், இந்த காட்சிகளால் எந்த ஒரு தாக்கமும் ஏற்படாது. அதனை ஒரு வீடியோ கேம் போல மக்கள் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் இதில் அப்படி அல்ல என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் நான் அந்த காட்சி வேண்டுமென்று அவர்களிடம் சண்டை செய்தேன். கர்ணனில் எல்லாம் எளிமையாகவும் அதன் உண்மை தன்மை கொண்ட அளவுக்கு கையாளப்பட்டும் பிரச்சனை ஏற்பட்டது.

- Advertisement -

இப்படி எனக்கு அனைத்து திரைப்படங்களிலும் சென்சாரில் பிரச்சனை வந்தது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஒரு விஷயத்தை, என் படங்களில் அனுமதிக்க மாட்டார்கள். ஒரு கம்பெடுத்து போலீஸ் ஸ்டேஷனை அடிப்பது போன்று நான் எடுத்த விஷயம் கதைப்படி ஒரு தார்மீகமான கோபம். எனக்கு சில வன்முறை காட்சிகளை திரையரங்கில் கொண்டாடும்போது கஷ்டமாக இருக்கும்.

தணிக்கையின் போது, எந்த அதிகாரிகளும் சொல்லக்கூடாத பதிலை என்னிடம் சொன்னார்கள். இதைக் கூறினால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். ஆனால் நீங்கள் எங்களிடம் சண்டை இட்டதால் நான் இதை தெரிவிக்கிறேன். இந்த பெயர் மற்ற திரைப்படங்களில் வரலாம் ஆனால் மாரி செல்வராஜ் படத்தில் இதை வருவதை எங்களால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்கள். மாமன்னன் திரைப்பட கதையை எழுதும்போது அந்த வார்த்தை என்னை முழுவதுமாக ஆக்கிரமித்தது” என்று அவர் கூறியிருக்கிறார். மாரி செல்வராஜ் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்