- Advertisement -
Homeபொழுதுபோக்குகதைக்கு தான் தமிழ் சினிமா இயக்குநர்களிடம் பஞ்சமோ பஞ்சம்… படத்தோட டைட்டிலுக்கும் அதே அவல நிலையா?...

கதைக்கு தான் தமிழ் சினிமா இயக்குநர்களிடம் பஞ்சமோ பஞ்சம்… படத்தோட டைட்டிலுக்கும் அதே அவல நிலையா? – சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு சோதனையா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அரைத்த மாவை அரைத்த கதையாக நல்ல கதைகளுக்கு பஞ்சம் என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. எப்படியாவது படத்தை ஹிட் ஆக்கியே தீர வேண்டிய நிலையில் பல இயக்குநர்கள், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வெற்றி படங்களின் கதைகளை சுட்டு, அதையே கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து, புது பெயிண்ட் அடித்து இது என்னோட படம் என வெளியிடுகின்றனர்.

கடைசியில் படம் பார்த்த பிறகு யோசித்தால், இப்போது வந்த பல ஹிட் படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஏதாவது ஒரு மொழியில் வந்து, ஹிட் ஆன படமாக தான் இருக்கிறது. சில இயக்குநர்கள் கதையை அப்படியே காப்பி அடித்து விடுவார்கள். சில இயக்குநர்கள், கண்டென்ட்டை மட்டும் உருவிக்கொண்டு, அங்கங்கே மானே தேனே போட்டு ஒப்பேத்தி விடுகின்றனர்.

- Advertisement -

உதாரணமாக ஜெயிலர் படம், அப்பட்டமான தங்கப்பதக்கம் படத்தின் கதை தான். சமூக விரோதியான மகன் ஸ்ரீகாந்த், நாட்டுக்கு துரோகம் செய்ய முயற்சிக்கும் போது அவரது தந்தை போலீஸ் அதிகாரியான சிவாஜியே சுட்டுக்கொல்வார். அதே போல், கடத்தலுக்கு துணை போகும் மகனை, ஜெயிலராக இருந்த ரஜினி சுட்டுக்கொல்வதுதான் நெல்சனின் ஜெயிலர் படத்தின் கதை.

விஜய் நடித்த லியோ படத்தின் கதையின் ஹிஸ்டரி ஆப் வயலயன்ஸ் என்ற ஆங்கில படத்தின் தழுவல்தான். ஆனால் அதில் இரட்டை பிறவி, நரபலி, விஜய் பேசிய ஆபாச வார்த்தை, திரிஷாவுக்கு லிப் லாக் போன்ற அபத்தமான விஷயங்கள் மட்டுமே லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்தனக்குமார் ஆகியோரின் சொந்த சரக்கு, இப்படித்தான் ரசிகர்களை இந்த டூபாக்கூர் இயக்குநர்கள் ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர்.

- Advertisement -

இப்போது 3 மாதங்களாக கதை எழுதிக்கொண்டு இருக்கும் லோகேஷ் கனகராஜ், எத்தனை ஆங்கில படங்கள், தமிழ் படங்களை பார்த்து ரஜினி 171 கதையை உருவாக்கப் போகிறாரோ என்பது தெரியாது. ஆனாலும், ரஜினிக்கு பிடித்திருந்தால் ஓகே சொல்லி விடுவார். அவருக்கு அவார்டை காட்டிலும் ரிவார்டு தானே முக்கியம். அதனால் காப்பியடித்த படக்கதை என்பதெல்லாம் அவருக்கு பிரச்னையே இல்லை.

இப்படிக்கு கதை பஞ்சம் இருக்கிற தமிழ் சினிமாவில், படத்தின் டைட்டிலுக்கும் பஞ்சம் வந்துவிட்டது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு, ஏற்கனவே கார்த்திக் நடித்து 1992ல் வெளிவந்த அமரன் என்ற படத்தின் பெயரை வைத்துள்ளனர். அதுமட்டும் அல்ல, சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த 20 படங்களில் எதிர்நீச்சல், ஹீரோ, மாவீரன், காக்கிசட்டை, வேலைக்காரன் இப்படி எல்லாமே ஏற்கனவே வெளியான பழைய படங்களின் டைட்டில்தான். பழைய படங்கள் டைட்டில் வரிசையில் அமரன் 6வது படம். சிவகார்த்திகேயனுக்கு பட டைட்டிலிலுமா இப்படி ஒரு பஞ்சம் வரணும்? என நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்