- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அழுது என் குழந்தைகள் பார்த்தது இல்லை, ஆனால் இப்போது பார்த்துவிட்டனர் - இயக்குநர் செல்வராகவன்...

நான் அழுது என் குழந்தைகள் பார்த்தது இல்லை, ஆனால் இப்போது பார்த்துவிட்டனர் – இயக்குநர் செல்வராகவன் வெளிட்ட உருக்கமான பதிவு

- Advertisement -

இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் இவருடைய தம்பி, இயக்குநர் கஸ்தூரிராஜா என்று அடையாளப்படுத்தி சொல்லும் அளவுக்கு, தமிழ் சினிமாவில் அப்பா, தம்பியை விட சாதித்துக் கொண்டு இருப்பவர். துள்ளுவதோ இளமை படம் மூலம், தமிழ் சினிமாவுக்குள் தனுஷை கொண்டு வந்ததே அவரது அண்ணன் செல்வராகவன்தான்.

இன்னொரு முக்கிய விஷயமும் உண்டு. அதாவது நடிகை சோனியா அகர்வாலின் முன்னாள் கணவர். செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தில் சோனியா அகர்வால் நடித்த போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், திருமணமான சில ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர்.

முதலில் படங்களை இயக்கியக்கொண்டு இருந்த செல்வராகவன் இப்போது நடிக்கவும் துவங்கி விட்டார். பீஸ்ட், பகாசுரன், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் செல்வராகவன் நடித்திருக்கிறார். இப்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ம் பாகத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார் என்பது சிறப்பு தகவல்.

இயக்குநராக மட்டுமின்றி அவரது நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. குறிப்பாக பகாசுரன் படத்தில் செல்வராகவன் நடிப்பு பலராலும் வெகுவாக ரசித்து பாராட்டப்பட்டது. சோனியா அகர்வாலை விவகாரத்து செய்த செல்வராகவன், இப்போது 2வது திருமணம் செய்துக்கொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

நேற்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உலகக்கோப்பை இறுதி போட்டி நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 241 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடி ஆஸ்திரேலியா அணி, 6 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இது இந்திய ரசிகர்களை மிகவும் ஏமாற்றத்தில் தள்ளியது. கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இந்நிலையில் செல்வராகவன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, நேற்று கிரிக்கெட்டில் தோற்ற பிறகு அழுதுகொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. நான் அழுது அவர்கள் பார்த்தது இல்லை. அது கிரிக்கெட் தோற்றதிற்காக வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல முடியாது. நெஞ்சம் உடைந்து சிதறியது, என அந்த பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்