- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நயன்தாரா குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள அத்தனையும் உண்மைதானா? - இல்லே இது நயன்தாராவே...

நடிகை நயன்தாரா குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ள அத்தனையும் உண்மைதானா? – இல்லே இது நயன்தாராவே செய்ற பில்டப்பா?

- Advertisement -

நடிகை நயன்தாராவை பொருத்த வரை நகமும், சதையும்போல அவரையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. நடிக்க வந்த புதிதில் நல்ல நடிகையாக ரசிகர்களிடம் அறிமுகமான அவர், சர்ச்சை நாயகன் சிலம்பரசனுடன் சேர்ந்து நடித்த பின், பல விஷயங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

சிலம்பரசனுடன் காதல் உறவை முறித்துக்கொண்ட பின், நடிகர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார். மனைவியை விவாகரத்து செய்த, 3 பிள்ளைகளுக்கு அப்பாவான பிரபுதேவாவுடன், நயன்தாரா சேர்ந்திருப்பது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஆனால், பிரபுதேவா திருமணம் செய்ய மறுத்ததால், நயன்தாரா அவரையும் விட்டு விலகினார்.

- Advertisement -

இயக்குநர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்த நயன்தாரா, கடந்தாண்டில் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். இதுவும் பல சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கு பின்பும், இன்னும் நயன்தாராவுக்கு மார்க்கெட் குறையால், தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பு குவிகிறது. அவரும் சம்பளத்தை ரூ. 12 கோடியாக உயர்த்திவிட்டார்.

இதற்கிடையே நடிகை நயன்தாரா, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓவராக அலப்பரை செய்கிறார். மதியத்துக்கு பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் நெர்வஸ்ஸாக இருக்கிறார். மாலை 4 மணிக்கே வீட்டுக்கு போக பரிதவிக்கிறார். கண்களில் கிளிசரின் போட மாட்டேன் என்கிறார். மண்ணாங்கட்டி ஷூட்டிங்குக்கு கொடைக்கானல் போகாமல், அந்த எஸ்டேட் செட்டை சென்னையில் போட வைத்தவர் என பல விமர்சனங்களில் நயன்தாரா சிக்கியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில், நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நயன்தாராவை வானாளவ புகழ்ந்து தள்ளியுள்ளது. அதாவது, இந்த படத்துக்காக நயன்தாரா 100 சதவீத உழைப்பை தந்துள்ளதாக ஏகத்துக்கு பாராட்டப்பட்டுள்ளார்.

அதில், அன்னபூரணி படப்பிடிப்பு இடைவேளையில் மதிய வேளை, இரவு வேளை உணவுக்கூட அவர் கேரவனுக்குள் செல்லவில்லை. சில நாட்களில் இரவு 12 மணி வரை படப்பிடிப்பு நடந்த போது, அவ்வளவு நேரம் இருந்து நடித்துக் கொடுத்தார். அதிகாலை 5 மணி வரை படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். சமையல் காட்சிகளில் கூட, உண்மையான சமையல் கலைஞர்களின் தொழில் நுணுக்கங்களை தெரிந்துக்கொண்டு, டூப் போடாமல் அவரே சமையல் காட்சிகளில் நடித்தார் எனத் தெரிவித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்