இளையராஜாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி நடிகர் தனுஷ் ஒரு படத்தில் நடிக்கிறார். அதாவது இசையமைப்பாளர் இளையராஜா வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்படுகிறது. இது தமிழ், இந்தி மொழிகளில் எடுக்கப்பட உள்ளது.
ஆனால் இந்த படத்தில் இளையராஜா போலவே இருக்கும் அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜா நடித்திருந்தால், தோற்றப் பொருத்தம் மிக சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், இளையராஜா கேரக்டரில் தனுஷ் சிறப்பாக நடிப்பார் என்பதால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இளையராஜா சினிமா வாழ்வில், சொந்த வாழ்வில் தொடர்புடைய அனைவரும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். அந்த அடிப்படையில் இந்த படத்தில் ஏஆர் ரகுமான், வைரமுத்து போன்ற கதாபாத்திரங்களும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம் இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்துக்கு இசையமைக்க போவது இளையராஜா அல்ல. இசைப்புயல் ஏஆர் ரகுமான்தான் இசையமைக்க போகிறார். அதோடு அவர் இந்த படத்தில் சில காட்சிகளில் தோன்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் மற்ற காட்சிகளில் ஏஆர் ரகுமான் கேரக்டரில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இளையராஜா இசையில் பல ஹிட் பாடல்களை 1980, 90களில் தந்தவர் கவிஞர் வைரமுத்து என்பதால், அவரும் இந்த படத்தில் இடம்பெறுகிறார்.
ஆனால், இளையராஜா – வைரமுத்துவுக்கு ஏற்பட்ட பிரச்னையால் 36 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து இருக்கின்றனர். அவரது இசையில், இவர் பாடல் எழுதுவதில்லை. இவரது பாடல் வரிகளுக்கு அவர் இசையமைப்பது இல்லை. அதனால், இந்த படத்தில் வைரமுத்து கேரக்டரில் நடிக்க, வைரமுத்து போலவே இருக்கும் நடிகரை, நபரை படக்குழு தேடிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.





