கடந்த பல மாதங்களாக நீடித்த ஒரு பிரச்னை, லியோ படத்தின் சக்சஸ் மீட்டின் போதுதான் முடிவுக்கு வந்தது. விஜய் சூப்பர் ஸ்டார் என ஒரு சர்ச்சை, வாரிசு படத்தின் போது கிளம்பியது. அதனால் ரஜினி, விஜய் ரசிகர்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைக்கு விஜயே இறுதியில் ஒரு முற்றுப்புள்ளி வைத்ததை பலரும் பாராட்டினர்.
45 ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். அந்த ஸ்டார் என்ற பெயரை வைத்து மெகா ஸ்டார், பவர் ஸ்டார், மெகா பவர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், மக்கள் சூப்பர் ஸ்டார் என பல ஸ்டார்கள், உருவாகி விட்டனர். இதுதவிர பாலிவுட் சூப்பர் ஸ்டார், மலையாள சூப்பர் ஸ்டார், தெலுங்கு சூப்பர் ஸ்டார் எனவும் பட்டப்பெயர்கள் தரப்பட்டுள்ளன.
இதற்கிடையே இப்போது சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படம் எடுக்க, படத்தின் டைட்டில் வைக்க பலரும் விரும்புகின்றனர்., தயாரிப்பாளர் எஸ் எஸ் குமரன், சூப்பர் ஸ்டார் என்ற பெயரை, படத்தின் தலைப்பாக வைக்க ஏற்கனவே பதிவு செய்து வைத்துவிட்டார்.
இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது படத்துக்கு சூப்பர் ஸ்டார் என டைட்டில் வைக்க விரும்பியிருக்கிறார். அடுத்து அவர் எடுக்கிற படத்துக்கு இந்த பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால், எஸ்எஸ் குமரனை அழைத்து கேட்டுள்ளார். அன்பு ரீதியாக அந்த டைட்டிலை எனக்கு கொடுத்து விடுங்கள் என்று கேட்க, அவர் மறுத்துவிட்டார்.
சூப்பர் ஸ்டார் தலைப்பை கொடுங்கள் என கேட்ட விக்னேஷ் சிவன், அதற்கான தொகை ஏதேனும் சொல்லி இருந்தால் கூட, ஒருவேளை அவர் தருவது குறித்து கூட யோசித்திருக்கலாம். ஆனால், ஓசியில் அந்த தலைப்பை கொடுங்கள் என கேட்டதால், எரிச்சலில் அவர் போனை வைத்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
அடுத்து, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இயக்குநர், நடிகர் கவுதம்மேனன், தனது படத்துக்கு சூப்பர் ஸ்டார் என தலைப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். தனது படத்துக்கான இந்த தலைப்பை ஏற்கனவே எஸ்எஸ் குமரன் பதிவிட்டுள்ள நிலையில், மற்ற இயக்குநர்கள் அந்த டைட்டிலை படம் எடுக்க திட்டமிடுவது, ஒரு போட்டியை உருவாக்கி வருகிறது.Competition among directors to film on the Superstar title





