- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த ஆண்டு பிரபலங்களுக்கான டாப் 10 பட்டியலை வெளியிட்ட IMDb... தல, தளபதியை ஓரங்கட்டிய மக்கள்...

இந்த ஆண்டு பிரபலங்களுக்கான டாப் 10 பட்டியலை வெளியிட்ட IMDb… தல, தளபதியை ஓரங்கட்டிய மக்கள் செல்வன்… நயன்தாராவுக்கும் முக்கிய இடம்…

- Advertisement -

உலகம் எங்கும் வெளியாகும் திரைப்படங்களை விமர்சித்து அதற்கான தர மதிப்பீட்டை கொடுத்து வருகிறது IMDb. இங்கு ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன்பு அதன் IMDb மதிப்பீட்டைப் பார்த்துவிட்டு படத்துக்கு செல்பவர்கள் நிறைய பேர் உண்டு. அந்த அளவுக்கு அதன் தரம் மதிப்பீடு துள்ளியமாக இருப்பதால், அதனை நம்பி பலரும் படம் பார்க்கச் செல்வார்கள்.

ஒவ்வொரு வருடமும் பிரபலமாக இடம் பிடித்திருக்கும் நட்சத்திரங்கள் குறித்த பட்டியலை IMDb வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்திற்கான டாப் 10 பட்டியலும் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் முதல் இடத்தை பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் பிடித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு பாலிவுட் திரையுலகில் வெற்றி திரைப்படங்கள் என்பது குறைவாகவே இருந்து வந்தன.

- Advertisement -

கிட்டத்தட்ட பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களும் படு தோல்வியை சந்தித்ததால், தள்ளாடிக் கொண்டிருந்தது பாலிவுட் திரையுலகம். அதை இந்த ஆண்டு தனது திரைப்படங்களின் மூலம் தலை நிமிரச் செய்தார் ஷாருக்கான். அவரின், பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் இந்த வருடம் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்தன. மிகப்பெரிய அளவுக்கு அவர் பேசப்பட்டதால் இந்த ஆண்டுக்கான பிரபலங்கள் பட்டியலில் அவர் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

இதில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் பாலிவுட் நடிகை ஆலியா பட். தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகை, கங்குவா கத்துவாடி திரைப்படத்திற்காக தேசிய விருதுக்கு இந்த முறை தேர்வானார். மூன்றாம் இடத்தில் இருப்பவர் பிரபல நடிகை தீபிகா படுகோனே. ஜவான் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளிலேயே அவர் வந்து போனாலும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டதால் இதில் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதில் நான்காவது இடத்தில் நடிகை வாமிகா இருக்க, ஐந்தாவதாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இடம் பெற்றுள்ளார். இந்த முறை ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டிற்க்கு அவர் அறிமுகமாகி இருந்தார். இப்படியான சூழலில், அவர் IMDb பட்டியலில் இடம்பெற்று இருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆறாவது இடத்தில் காவாலயா பாடல் மூலம் கிறங்கடித்த தம்மன்னா இருக்கிறார்.

ஏழாவது இடத்தில் கரினா கபூர், எட்டாவது இடத்தில் சோபிதா, ஒன்பதாவது இடத்தில் அக்ஷய் குமாரும் இருக்கின்றனர். பத்தாவது ஆக தமிழ் நடிகர் விஜய் சேதுபதி இடம் பெற்றுள்ளார். இந்த வருடம் அவர் ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். டாப் 10 பட்டியலில் தென்னிந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே நடிகராக அவர் இருக்கிறார். விஜய் அஜித் ஆகியோர் இந்த வருடமும் இதில் இடம்பெறாத சூழலில், விஜய் சேதுபதி இடம் பிடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்