- Advertisement -
Homeபொழுதுபோக்குபார்க்கிங் திரைப்படம் பற்றி லோகேஷ் கனகராஜ் கூறிய வார்த்தைகள்... அடடே இந்த இயக்குநரே இப்படி சொல்லிட்டாரா......

பார்க்கிங் திரைப்படம் பற்றி லோகேஷ் கனகராஜ் கூறிய வார்த்தைகள்… அடடே இந்த இயக்குநரே இப்படி சொல்லிட்டாரா… அப்புறம் என்ன நிச்சயம் ஹிட் தான்…

- Advertisement -

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். மாமனார் மருமகளுக்கு இடையேயான உறவை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்ப, அதில் ஹரிஷ் கல்யாண் நடித்தாரா என்று கேள்வி எழும் அளவுக்கு அந்த திரைப்படம் அமைந்தது.

இதன் பிறகு சட்டப்படி குற்றம், பொறியாளன் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்த ஹரிஷ் கல்யாண் அந்த அளவுக்கு பெரிதாக ஒன்றும் ஜொலிக்கவில்லை. தொடர் தோல்விகள் காரணமாக துவண்டு இருந்த அவருக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சி கை கொடுத்தது. அதில் வந்த ஹரிஷ் கல்யாண் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இளம் பெண்களின் கனவு நாயகனாகவும் ஹரிஷ் கல்யாண் வலம் வர ஆரம்பித்தார்.

- Advertisement -

இதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. பியார் பிரேம காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஓரளவு பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த திரைப்படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும், இளைஞர்களுக்கு அந்த திரைப்படம் பிடித்துப் போனதால் ஹரிஷ் கல்யாணத்துக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

இதன் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே, எல்ஜிஎம் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியையே கொடுத்தன. இந்த நிலையில் தனது திருப்புமுனைக்காக காத்திருக்கும் ஹரிஷ் கல்யாண், அடுத்ததாக பார்க்கிங் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதுபோக டீசல், லப்பர் பந்து உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதில் பார்க்கிங் திரைப்படம் ஹரிஷ் கல்யாணத்துக்கு நல்ல பெயரை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம் எஸ் பாஸ்கர் நடித்திருக்கும் இந்த திரைப்படம், ஒரு வாகன நிறுத்தும் இடத்தை மையமாக வைத்தும் அதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிசம்பர் ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

பார்க்கிங் படம் குறித்து பேசி இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சில நாட்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தை நான் பார்த்தேன். அப்போது பிளாக்பஸ்டர் திரைப்படத்திற்கான ஒரு வைப் இதில் இருந்தது. மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் திரைப்படத்தைப் போல, இரண்டு கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் ஈகோதான் படத்தின் கதை. ரசிகர்கள் இந்த படத்துடன் எளிதாக இணைந்து கொள்வார்கள். எம் எஸ் பாஸ்கர் சாருடன் நான் இணைந்து பணிபுரிய ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் என்று பேசி இருக்கிறார். இயக்குனரின் இந்த விமர்சனத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்