- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68 படத்தின் கதையை லீக் செய்தாரா வெங்கட் பிரபு?.. இதோ பாருங்க அவர் கொடுத்திருக்கும்...

தளபதி 68 படத்தின் கதையை லீக் செய்தாரா வெங்கட் பிரபு?.. இதோ பாருங்க அவர் கொடுத்திருக்கும் ஹிண்ட்ட

- Advertisement -

விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது . லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறஹ்டு. மொத்தமாக இதுவரை உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர்.

இதற்கிடையே லியோ படத்தில் நடித்தபோதே தனது 68ஆவது படத்தில் கமிட்டானார் தளபதி விஜய். அந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ். நிறுவனம் தயாரிக்கிறது. அந்த நிறுவனத்துக்கு இது 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக அவர் விஜய் நடித்த புதிய கீதை படத்துக்கு இசையமைத்திருந்தார்.

- Advertisement -

வெங்கட் பிரபு முதன்முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கிறார். அவர் அஜித்துடன் முதன்முறையாக இணைந்த மங்காத்தா படம் எப்படி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதோ அதேபோல் தளபதி 68 படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகவேண்டும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருக்கின்றனர். அதேபோல் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் விஜய்க்கு எப்படி பொருந்துகிறது என்பதை பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள்.

படத்தின் பூஜை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடந்து அங்கு வைத்து ஒரு பாடல் ஷூட் செய்யப்பட்டது. அதனையடுத்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்ற படக்குழு அங்கு ஆக்‌ஷன் காட்சிகளையும், இன்ன பிற காட்சிகளையும் எடுத்தது. அந்த ஷெட்யூலை முடித்து சென்னை திரும்பியிருக்கும் படக்குழு அடுத்தக்கட்ட ஷெட்யூலையும் மும்முரமாக நடத்திவருகிறது.

- Advertisement -

இதற்கிடையே இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என பல யூகங்கள் சொல்லப்பட்டன. அதில் ஒன்று டைம் ட்ராவல் ஜானர். கண்டிப்பாக இந்தப் படம் டைம் ட்ராவல் ஜானரில் இருக்கும் என கூறப்பட்டது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்நிலையில் வெங்கட் பிரபு போட்டிருக்கும் ஒரு ட்வீட் தளபதி 68 டைம் ட்ராவல் ஜானரில்தான் உருவாகியிருப்பதாக உணர்த்துகிறது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்

அதாவது மாநாடு திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. எனவே சிம்பு அதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’மாநாடு வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவு அடைந்தது மகிழ்ச்சி. இந்த டைம் லூப் மீண்டும் தொடராதா என ஏக்கத்துடன் பதிவு செய்திருந்தார். அதனை ரீ ட்வீட் செய்த வெங்கட் பிரபு, டைம் லூப் தொடர்கிறது என குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் விஜய்யை வைத்து படம் இயக்கிவருவதால் இந்தப் படத்தின் ஒன்லைனைத்தான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார் என ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்