- Advertisement -
Homeபொழுதுபோக்குபிச்சைக்காரன் படத்தில் நடிக்க மறுத்த ஹீரோ, அவர் நோ சொன்னதால் விஜய் ஆண்டனி அடித்தது லக்...

பிச்சைக்காரன் படத்தில் நடிக்க மறுத்த ஹீரோ, அவர் நோ சொன்னதால் விஜய் ஆண்டனி அடித்தது லக் – அந்த சூப்பர் சான்ஸை மிஸ் பணணினது இவரா?

- Advertisement -

இயக்குநர் சசி இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பிச்சைக்காரன். தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக கோடீஸ்வரனாக இருக்கும் அவரது மகன் 48 நாட்கள் பிச்சைக்காரனாக சென்னையில் வாழ்வதுதான் இந்த படத்தின் மையக்கதை.

இந்த படத்தில், பிச்சைக்காரன் கேரக்டரில் விஜய் ஆண்டனி நடிப்பு வேற லெவலில் இருந்தது. சில குறிப்பிட்ட காட்சிகளில் அவரது யதார்த்தமான நடிப்பு, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. பிச்சைக்கார கூட்டத்தில் அவர் சேருவது, அவர்களில் ஒருவராக கலந்து வாழ்வது போன்ற இயல்பான காட்சிகள் படத்தை ஜனரஞ்சகமாக்கியது.

- Advertisement -

இதில் ஒரு காட்சியில், ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், 1000, 500 ரூபாய் நோட்டுகளை நிறுத்த வேண்டும். 100 ரூபாய், 50 ரூபாய் மட்டுமே புழக்கத்தில் இருக்க வேண்டும் என்ற பிச்சைக்காரர் ஒருவர், எப்எம் ரேடியோ நிகழ்ச்சிக்கு போன் செய்வது போன்று காட்சி வரும்.

இந்த படம் வந்த காலகட்டத்தில், 1000, 500 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததும், பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக 2 ஆயிரம் ரூபாய் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது 2 ஆயிரம் ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டு, திரும்ப பெறப்பட்டு விட்டது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

பிச்சைக்காரன் படம்தான், விஜய் ஆண்டனிக்கு சினிமா பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை, முன்னேற்றத்தை தந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன் மீண்டும் பிச்சைக்காரன் 2 என்ற படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இயக்கினார். ஆனால், இந்த படம் போதிய வரவேற்பை, ரசிகர்களின் கவனத்தை பெறவில்லை.

சசி இயக்கத்தில் முதலில் பிச்சைக்காரன் படத்தில் நடிக்க அவர் நேரில் அணுகியது நடிகர் சித்தார்த்தை தான். அவர் இந்த கேரக்டரில் எப்படி நடிப்பது என மறுத்துவிட்ட பிறகுதான், விஜய் ஆண்டனியை சசி, தேர்வு செய்திருக்கிறார். பிச்சைக்காரன் படம் பார்த்த சித்தார்த், இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேனே என புலம்பியிருக்கிறார். அதற்கு பிறகுதான், சசி இயக்கத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருடன் சித்தார்த், டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார். ஆனால் பிச்சைக்காரன் அளவுக்கு இந்த படம் பேசப்படவில்லை.

- Advertisement -

சற்று முன்