எதிர்பார்ப்புகள் இல்லை என்றால், ஏமாற்றங்கள் இல்லை என்ற பழமொழி உள்ளது. அதாவது, மனிதர்கள் எதிர்பார்க்க, எதிர்பார்க்க தான் அதற்கு எதிர்மறையான விஷயங்களாக நடந்து ஏமாற்றங்களை அதிகமாக தரும். எதிர்பார்க்காமல் இருந்துவிட்டால், ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லை.
ஆனால், லியோ படத்தை பொருத்த வரை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்பார்ப்புகள் ஏராளமாக இருந்தன. அந்த எதிர்பார்ப்புகளை அப்படியே படக்குழுவினர், கடைசி வரை மெயின்டெயின்ட் செய்து உண்மைகளை கூறாமல் ரகசியமாக வைத்தனர். அதுவே, படத்தின் மாபெரும் ஏமாற்றத்துக்கு வழிவகுத்து விட்து.
எல்சியு என கூறப்பட்ட லியோ படத்தில், கடைசியில் கமல் மட்டும் ஒலிக்கிறது. கைதி படத்தில் நடித்த போலீஸ்காரர் மட்டுமே, இந்த படத்தில் அதே கேரக்டரில் விஜய் வீட்டுக்கு காவல் போலீசாக வருகிறார். மற்றபடி சூர்யா, ராம்சரண், தனுஷ், கார்த்தி என யாரும் இந்த படத்தில் வரவில்லை. ஆனால், இவர்களும் வருவது போன்ற ஒரு தகவலை, கடைசி வரை லியோ படக்குழு மறுக்கவே இல்லை.
அடுத்து மிஷ்கின், அனுராக் காஷ்யப் போன்ற அற்புதமான நடிகர்களை லோகேஷ் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை. அவர்களின் நடிப்பை, ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். நீ லியோதானே என்ற கேள்வியை சஞ்சய் தத் கேட்டுக்கொண்டே இருக்கிறார். அவருக்கு பின் அர்ஜூன் கேட்கிறார். அவர்கள் அதை தெரிந்துக்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் என கடைசி வரை ரசிகர்களுக்கு தெரியவே இல்லை.
இசை வெளியீட்டு விழா நடக்காத நிலையில் படத்தில் நடித்த நடிகர், நடிகையர் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கலாம். விஜய், திரிஷா, அர்ஜூன் போன்றவர்கள் கலந்துக்கொண்டு இருக்கலாம். ஆனால் படப்பிடிப்பை முடித்தவுடன், அவர்கள் அடுத்த படங்களில் நடிப்பதில் பிஸி ஆகிவிட்டனர். இது சமைத்த உணவை, பரிமாறாத நிலையிலேயே அவர்கள் கிளம்பி விட்டதை போல இருந்தது. லோகேஷ் கனகராஜ் மட்டுமே, படத்தை பற்றி கூவிக் கூவி பேசிக்கொண்டே இருந்தார்.
இப்படி படத்துக்கு பாசிட்டிவ் ஆக நினைத்த பல விஷயங்கள், ரசிகர்களுக்கு நெகட்டிவ் ஆக மாறி, பலத்த ஏமாற்றத்தையே கொடுத்தது. திரைக்கதை ஆளுமை என்பதே இல்லாத ஒரு படமாக, அதுவும் நரபலி, இரட்டை குழந்தை, ஆள் மாறாட்டம், விஜய் தன்னைத்தானே திட்டிக்கொள்ளும் அந்த கெட்டவார்த்தை இதெல்லாம் வைத்து பார்க்கும்போது, ஒரு சராசரி இயக்குநர், சாதாரண நடிகர் நடித்த படத்தில் கூட இத்தனை அபத்தங்கள் இருக்காதே என்றுதான், ரசிகர்களுக்கு தோன்றுகிறது. அதனால்தான் லியோ, மக்கள் விரும்பாத ஒரு படமாக மாறிவிட்டது.





