புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முன்னணி நட்சத்திர நடிகராக ஏராளமான படங்களில் நடித்தார். கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை தலைவராக கொண்டாடினார்கள். தனது ரசிகர்களின் உடல் ஆரோக்கியம் நல்ல பழக்கம் ஆகியவற்றை கவனத்தில் வைத்து தனது படங்களில் புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் எம்ஜிஆர் கவனமாக தவிர்த்தார்.
அதே போல் எம்ஜிஆரின் மிக தீவிரமான ரசிகரான நடிகர் ராமராஜனும் தனது படங்களில் புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்காமல் தவிர்த்தார். இயக்குனர் வெங்கட்பிரபு ஒருமுறை பார்ட்டி என்ற படத்தில் நடிக்க அழைத்த போது, அந்த காட்சிகளில் நடிக்க முடியாது என்பதற்காகவே அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பையே மறுத்தவர் நடிகர் ராமராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இப்போதெல்லாம் படத்தில் நாயகிகளே மதுபானம் குடிப்பது போலவும், சிகரெட் புகைப்பது போலவும் மிகவும் ஜாலியாக நடித்து விடுகின்றனர். யாரடி நீ மோகினி படத்திலேயே ஒரு காட்சியில் நயன்தாரா மதுபானம் குடிப்பது போல் ஒரு காட்சியில் தனுஷூடன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நயன்தாரா ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்த டாக்ஸிக் படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த படத்தில் ஹீரோ யஷ் அக்காவாக நயன்தாரா நடித்துள்ளார். கதையின்படி இடைவேளை வரை அவருக்கு நல்ல கேரக்டர். நிறைய காட்சிகள் இருந்தன. தாதா கும்பலை சேர்ந்தவராக கடத்தல்காரன் அக்காவாக நயன்தாரா நடித்திருப்பதால் சில இடங்களில் புகைபிடிக்கும் காட்சி, ஒரு இடத்தில் சரக்கு அடிக்கும் காட்சிகளில் நயன்தாரா நடித்திருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே அப்படி இருக்கிறது.
அதிலும் ஒரு சீனில் மட்டுமே அவர் சிகரெட் புகையை இழுத்து ஊதுபவராக இருக்கிறது. மற்ற சீனில் அவரது கையில் சிகரெட் இருக்கிறது. இன்னொரு சீனில் அவர் கையில் மதுபானம் இருக்கிறது. ஆனால் அதை குடிப்பது போல் காட்டவில்லை. இதுவரை இப்படிப்பட்ட கேரக்டரில் நயன்தாரா நடித்தது இல்லை. ஆனாலும் இயக்குனர் கீது மோகன்தாஸ் அவரது நெருங்கிய தோழி என்பதாலும் கதைக்காகவும் இப்படி நயன்தாரா நடித்ததாகவும் கூறப்படுகிறது.
டாக்ஸிக் படம் காட்டு மொக்கை படம் என்று ரசிகர்கள் வறுத்தெடுக்கும் நிலையில் படத்தில் நயன்தாராவின் இந்த விவகாரமான காட்சிகளை யாரும் பெரியதாக கவனிக்கவில்லை. அதே சமயத்தில் நாளை ஹாய் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கவின் ஹீரோவாக நடித்திருக்கிறார். நயன்தாரா பக்காவான ஹோம்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் அந்த படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார். இந்த நிலையில் டாக்ஸிக் படத்தில் வந்த சிகரெட் மதுபான காட்சிகள் நயன்தாராவுக்கு இந்த படத்தில் வில்லங்கத்தை தருமா? என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.





