- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தின் இயக்குநருக்கு ரூ. 5 கோடி சம்பள பாக்கியா?, சோஷியல் மீடியாவில் வைரலான தகவல்...

லியோ படத்தின் இயக்குநருக்கு ரூ. 5 கோடி சம்பள பாக்கியா?, சோஷியல் மீடியாவில் வைரலான தகவல் – பயங்கர அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியானது. படத்தின் முதல் பாகம் ரசிகர்களின் மனம் கவர்ந்தாலும் இரண்டாம் பாகம் அதாவது, இடைவேளைக்கு பிறகு அது லோகேஷ் கனகராஜ் படமாக இல்லாமல், ஏதோ டப்பிங் செய்த தெலுங்கு படம் போல மாறிவிட்டது.

ஆனால் வசூலில், 540 கோடி ரூபாய் என்ற பெரிய இலக்கை லியோ தொட்டாலும், விமர்சன ரீதியாக இந்த படம் லோகேஷ் கனகராஜை திருப்திப்படுத்தவில்லை என்பதே மாபெரும் உண்மை. எனினும் அதை வெளிப்படுத்தாமல் சகஜமாக தன்னை காட்டிக்கொண்டார். சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் லோகேஷ் கனகராஜையும் கடுமையாக விமர்சிக்கவே செய்தனர்.

- Advertisement -

இதற்கிடையே படத்தில் நடனமாடிய 1,200 பேருக்கு சம்பள பாக்கி, படத்தின் உதவி இயக்குநர்களுக்கு சம்பள பாக்கி என்றெல்லாம் தகவல்கள் பரவியது. அதுமட்டுமின்றி லியோ வசூல் குறித்து தயாரிப்பாளர் லலித்குமார் பிளான் பண்ணி சொல்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது மட்டுமின்றி மற்றொரு முக்கிய விவகாரம், லியோ படத்தில் தலைதூக்கியது. அது தியேட்டர் உரிமையாளர்களுக்கு, விநியோகஸ்தர்கள் பங்கு தருவதில் 60க்கு 40 என்ற நிபந்தனையை மாற்றி 75க்கு 25, சில இடங்களில் 80க்கு 20 என பங்கை குறைத்துவிட்டதாகவும் பயங்கர சர்சை எழுந்தது. இது உண்மைதான் என்பதை அப்போதைய தமிழ்நாடு மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் திருப்பூர் சுப்ரமணியமும் தெரிவித்தார்.

- Advertisement -

இதற்கிடையே சில தினங்களாக மீண்டும் ஒரு பஞ்சாயத்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதுதான் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை மிகவும் அப்செட் செய்திருக்கிறது. லியோ குறித்த பல விமர்சனங்களை, சர்ச்சைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியவர், இந்த விஷயத்தில் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்.

அதாவது லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜூக்கு ரூ. 5 கோடி வடர சம்பள பாக்கி இருப்பதாக பரவிய தகவல்தான் அது. ஆனால் தனக்கு ஒரு ரூபாய் கூட பாக்கி இல்லாமல், சம்பளம் ரூ. 20 கோடி, ஜிஎஸ்டி ரூ. 2 கோடி உட்பட ரூ. 22 கோடி ரூபாய் முழுமையாக வழங்கப்பட்டுவிட்ட நிலையில், இப்படி வதந்தியை கிளப்பி விடுகிறார்களே என்றுதான் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சற்று முன்