ரஜினிகாந்த் படங்கள் என்றாலே, ரசிகர்களுக்கு அது திருவிழா தான். அவரது படங்களில் நடிப்பது என்பது பலருக்கு பெரிய பரிசாகவே இருக்கிறது. ஏனெனில் ரஜினியுடன் ஒரு படத்தில் நடித்தாலே, சகல தரப்பு ரசிகர்களையும் சென்றடைய முடியும். தவிர, அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்கும்.
ரஜினி நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த படம் காலா. இந்த படத்தில், ரஜினி மும்பை தாராவியில் தாதாவாக இருப்பார். அவரை தாராவியை விட்டு வெளியேறுமாறு ஹரிதாதா மிரட்ட, அதை எதிர்த்து நிற்பதுதான் காலா படத்தின் கதை.
இந்த படத்தில், ரஜினிகாந்த் மகன்கள் 3 பேர், அதில் ஒரு புரட்சிக்கரமான கேரக்டரில் மணிகண்டன் நடித்திருப்பார். ஈஸ்வரி ராவ் மனைவியாக நடித்திருப்பார். இதில் மணிகண்டன் கேரக்டரில் தனுஷ் நடிப்பதாக முதலில் பேசப்பட்டுள்ளது. ஆனால், ரஜினி வேண்டாம் என கூறிவிட்டதாக தெரிகிறது. மருமகனை முன்னிறுத்தி, தன் படம் விமர்சிக்கப்படலாம் என்பதால் அதை தவிர்த்திருக்கிறார் ரஜினிகாந்த்.
அதைத்தொடர்ந்து, ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக சிவகார்த்திகேயன் முதலில் நடிப்பதாக ஒரு பிளான் இருந்துள்ளது. ஆனால், அந்த கேரக்டர் ஆண்டி ஹீரோ கேரக்டர், ரஜினி மகனையே சுட்டுக்கொல்லும் ஒரு மோசமான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும். வளர்ந்துவரும் அவரது இமேஜ் இந்த படத்தில் வரும் கேரக்டரால் டேமேஜ் ஆகக் கூடாது என்பதால், அதையும் ரஜினி மறுத்திருக்கிறார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு தர முக்கிய காரணம், அவரது இமேஜ் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இமான் சொன்ன குற்றச்சாட்டால், அவரது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. அயலான் படமும் ரிலீஸ் ஆவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது.
அதுமட்டுமின்றி, இதற்கு பின்னணியில் தனது மருமகன் தனுஷின் மறைமுக செயல்பாடுகளும், சிவகார்த்திகேயனுக்கு எதிரான சில முயற்சிகளையும் தெரிந்துக்கொண்ட ரஜினி, தனது ஆரம்ப காலத்தில் இதுபோன்ற சில நெருக்கடிகளை சந்தித்து, முறியடித்து மேலே வந்தவர் என்பதால், சிவகார்த்திகேயனை கைதூக்கி விடும் திட்டத்தில், இந்த படத்தில் நிச்சயம் சிவகார்த்திகயேன் நடிக்க வேண்டும். அதுவும் கதைப்படி அவர் கேரக்டர் மரியாதைக்குரியதாக, ரசிகர்கள் பாராட்டும்படியாக இருக்க வேண்டும் எனவும் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார் ரஜினிகாந்த்.





