நடிகர் அஜீத்குமார், ரஜினிகாந்த்தை போல, விஜயை போல சினிமாவில் தீவிர ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே அவர் தீவிர சினிமா ஆர்வத்தில் இல்லை என, சினிமா விமர்சகர் கபேர், சில மாதங்களுக்கு முன்பே கூறியிருந்தார். அதாவது அஜீத்குமார் மனதில் சில விஷயங்களை வைத்துதான் ஒவ்வொரு விஷயங்களையும் செய்து வருகிறார் என சுபேர் அதில் சுட்டிக்காட்டியிருந்தார்.
நடிகர் அஜீத்குமார், குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவர் விரும்பியதை காட்டிலும் அதிக புகழ் கிடைத்து விட்டது. தமிழகத்தில் எங்கு சென்றாலும், அவரால் சுதந்திரமாக பொது இடங்களில் நடமாட முடியவில்லை. அந்தளவுக்கு ரசிகர்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் வெளியிடங்களுக்கு செல்வதற்கே அஜீத்குமார் தயங்கி வருகிறார்.
அதுமட்டுமின்றி அஜீத்குமாருக்கு சில ஆண்டுகளாகவே பைக்கில் டூர் செல்வது, ரைடிங் கிளப்பில் துப்பாக்கி சுடுதல், பயிற்சி விமானம் ஓட்டுவது போன்ற விஷயங்களில்தான் அவருக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை அவர் தேடுவதும் இல்லை. துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தை துவங்க, பல மாதங்கள் தாமதம் ஆக காரணமே அஜீத்குமார்தான்.
கடந்த சில ஆண்டுகளாக, வருடத்தில் பாதி நாட்கள் அஜீத்குமார் வெளிநாட்டில்தான் இருக்கிறார். ஏனெனில் அவருக்கு வெளிநாடுகளில் இருக்கும்போதுதான் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் சென்றுவர முடிகிறது. அவரது பிரைவசியை அவரால் அங்கு அனுபவிக்க முடிகிறது. அதனால்தான் அஜீத்குமார் வெளிநாட்டில் இருப்பதையே இருக்க விரும்புகிறார்.
ஏற்கனவே, துபாயில் அஜீத்குமாருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. விடாமுயற்சி படம் ஷூட்டிங்கில் இருந்த போது அடிக்கடி தனது சொந்த வீட்டில் போய் தங்கி ஓய்வெடுத்து கொண்டார். இப்போது மீண்டும் துபாயில் மரீனா என்ற இடத்தில் மீண்டும் பல கோடி ரூபாய் வீடு வாங்கியிருக்கிறார். இப்போது துபாயில் அஜீத்குமாருக்கு 2 வீடுகள் இருக்கின்றன.
இதுகுறித்து சுபேர் கூறியதை போல, அஜீத் இன்னும் சில ஆண்டுகள் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை, தமிழகத்தில் இருப்பார். சில படங்களில் நடிப்பார். அதற்கு பிறகு அவர், துபாயில் அல்லது ஏதேனும் ஒரு வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகி விடுவார். அதன்பிறகு சினிமாவில் அவர் நடிப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டு பிஸினஸ்களில் ஈடுபாடு காட்ட அதிக வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





