தமிழ் சினிமாவில் ஒரு சரித்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த 1975ம் ஆண்டில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகராக அறிமுகமான அவர் பிறகு பைரவி என்ற படம் மூலம் ஹீரோவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். பிறகு ரஜினி ஒரு முன்னணி நட்சத்திர நடிகராக மாறினார்.
தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளில் 171 படங்களில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் திரைக்கு வர உள்ளது. இப்போது நடிகர் கமல்ஹாசனின் சொந்த நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தர்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதி வருகிறார். இதில் தனது இளமை பருவம் சினிமாவில் கால் பதித்த சம்பவம் சினிமாவில் சாதிக்க அவர் சந்தித்த போராட்டங்கள், சூப்பர் ஸ்டாராக மாறியது சூப்பர் ஸ்டாராக வெற்றி பெற்ற பிறகு அவரது தொடர்ந்த திரை பயணம் என பல்வேறு விஷயங்களை தனது வாழ்க்கை சம்பவங்களை தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இடம் பெறச் செய்கிறார். மிக விரைவில் இந்த புத்தகம் முழுமையான வடிவம் பெற்று ரசிகர்களின் கைகளுக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இதை தனது பயோபிக் திரைப்படமாகவே எடுக்க வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்திருக்கிறார். உலகம் முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இதை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என எல்லா மொழி ரசிகர்களிடமும் கொண்டு சேரும் விதமாக ஒரு திரைப்படமாக உருவாக்கவும் நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்து இருக்கிறார். இதுபற்றி தனது நண்பர்களிடமும் அவர் ஆலோசித்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் இந்த வரலாற்று சிறப்புமிக்க ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போகும் டைரக்டர் யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. ஏனென்றால் தமிழ் சினிமா வரலாறில் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு படம் என்பது ஒரு பொக்கிஷமாக மாறப் போகிறது. அதனால் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பை ரஜினி யாருக்கு கொடுக்கப் போகிறார் என்பதும் அதிக கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் லிஸ்டில் சில முக்கிய இயக்குனர்கள் உள்ளனர். அதில் கேஎஸ் ரவிக்குமார் ஷங்கர் கார்த்திக் சுப்பராஜ் பி வாசு சுரேஷ் கிருஷ்ணா நெல்சன் லோகேஷ் கனகராஜ் எஸ்பி முத்துராமன் என சிலர் உள்ளனர். இவர்களில் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பது சஸ்பென்ஸ் நீடிக்கிறது. ஆனால் இந்த படத்தை எடுக்கக்கூடிய ஒரு இயக்குனருக்கு நிச்சயமாக அவரது திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக, பெரிய பெருமையாக இது அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





