- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அதை சொல்லிக் கொடுத்ததே சீனியர் நடிகை ராதிகா தான், ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததை அப்படியே...

எனக்கு அதை சொல்லிக் கொடுத்ததே சீனியர் நடிகை ராதிகா தான், ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததை அப்படியே சொன்ன நடிகை அமலா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு அழகான நடிகை அமலா. கடந்த 1980 – 90களில் தமிழில் ஏராளமான படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். குறிப்பாக நடிகர் ரஜினிக்கு ஜோடியாக கொடி பறக்குது மாப்பிள்ளை வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

நடிகர் கமலுடன் சத்யா படத்தில் நடித்திருக்கிறார். மேலும் மெல்லத் திறந்தது கதவு உயிருள்ளவரை உஷா அக்னி நட்சத்திரம் ஜீவா வேதம் புதிது என பல ஹிட் படங்களில் அமலா நடித்திருக்கிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்த அமலா, பிறகு தெலுங்கு ஹீரோ நாகர்ஜூனாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

- Advertisement -

நடிகை அமலா அன்றைய காலகட்டத்தில் மிகவும் இளமையான அழகான ஒரு நடிகையாக இருந்தார். நடிகை அமலாவை திருமணம் செய்ய வில்லன் நடிகர் ரகுவரன் விரும்பியதாகவும் ஒரு தகவல் அப்போது இருந்தது. அதே போல் மற்றொரு பிரபல நடிகரும் அமலாவும் நெருக்கமான நட்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

எனினும் நடிகை அமலா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்துக்கொண்ட நிலையில் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இப்போதும் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதிலும் இனி சினிமாவில் நடிப்பதில்லை என்ற தீர்க்கமான முடிவில் இருந்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை அமலா கூறியதாவது, ராதிகா எனக்கு சீனியர். ஒரு நாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் நான் மேக்கப் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் அவர் அங்கே வந்தார். என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று சொல்லிவிட்டு எப்படி மொக்க மேக்கப் போட வேண்டும் என்று எனக்கு அவர் சொல்லிக் கொடுத்தார்.

உன் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது? அதை ஏன் கெடுக்கிறாய் என்றும் என்னிடம் சொன்னார். அப்போது இருந்துதான் நான் ஒழுங்காக மேக்கப் போட தொடங்கினேன் என்று நடிகை அமலா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். 1980 நடிகர் நடிகைகள் சந்திப்பு அடிக்கடி சென்னையில் நடக்கிறது. இதில் ராதிகா குஷ்பு மீனா ரேவதி சுகாசினி போன்றவர்களுடன் நடிகை அமலாவும் வந்து கலந்துக்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்