- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படம் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு - கறாராக நடந்துக்கொண்ட இயக்குனர் ஆர்ஜே பாலாஜி,...

கருப்பு படம் ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு – கறாராக நடந்துக்கொண்ட இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, அப்போ அத்தனையும் நடிப்பா கோபால்?

- Advertisement -

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் நடிகர் சூர்யா நடித்த படம் கருப்பு. இந்த படத்தை இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கி இருந்தார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா சுவாசிகா ஷிவதா மற்றும் மலையாள நடிகர் இந்திரன்ஸ் நட்டி நடராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் வில்லனாக ஆர்ஜே பாலாஜியும் நடித்திருந்தார்.

கடந்த மாதம் 14ம் தேதி வெளியாக வேண்டிய இந்த படம் மறுநாள் 15ம் தேதி தான் வெளியானது. இந்த படத்துக்கு பைனான்சியர்கள் தந்த நெருக்கடி காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் படத்தின் நாயகன் சூர்யா 150 கோடி ரூபாய் கடன்களுக்கு பொறுப்பேற்று கையெழுத்து போட்டதாகவும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த படம் 14ம் தேதி வெளியாகாத நிலையில் அன்று படம் பார்க்க முன்பதிவு செய்த ரசிகர்கள் நீண்டதூரம் பயணித்து படம் பார்க்க தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்களும் பலத்த ஏமாற்றமடைந்தனர். காலைக்காட்சி ரத்து ஆன நிலையில் பிறகு மதியம் மாலை இரவு காட்சிகளும் வெளியாகவில்லை.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, காரில் இருந்தபடி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அப்போது கருப்பு படம் அன்று ரிலீஸ் ஆகாதது குறித்து மிகவும் வேதனையாக பேசிய அவர் கண்ணீர் விட்டும் அழுதார். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மன்னித்து விடுங்கள் என்றும் வீடியோவில் உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார்.

- Advertisement -

ஆனால் கருப்பு படம் குறித்து இப்படி கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, பண பிரச்னை காரணமாக படம் ரிலீஸ் ஆகாத அந்த சூழ்நிலையிலும் தனக்கு பேசப்பட்ட ரூ. 12 கோடி சம்பளத்தை கறாராக பேசி ஒரு ரூபாய் பாக்கி இல்லாமல் தயாரிப்பு நிறுவனத்திடம் வாங்கியதாக ஒரு வீடியோவில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

கருப்பு படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையில் இப்போது 300 கோடி ரூபாய் வசூலை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறது. படத்தின் நாயகன் என்ற முறையில் நடிகர் சூர்யா 150 கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பெற்ற நிலையில் படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, தனது சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட பாக்கியின்றி வசூலித்தார் என்று ஜெ. பிஸ்மி அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்