- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது வரமா சாபமா? விஜய் - அஜீத்குமார் இடையே ஏற்பட்ட திடீர் நெருக்கம், மக்கள் எதிர்பார்த்த...

இது வரமா சாபமா? விஜய் – அஜீத்குமார் இடையே ஏற்பட்ட திடீர் நெருக்கம், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? – விளாசித் தள்ளிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

நடிகர்கள் விஜய் அஜீத்குமார் இருவரும் 1990களில் ஒரே காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோக்களாக அறிமுகமானவர்கள். அமராவதி படத்தில் ஹீரோவாக நடித்த அஜீத்குமார் பிறகு வசந்த் இயக்கிய ஆசை அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதே போல் நாளைய தீர்ப்பு படத்தில் தனது தந்தை எஸ்ஏசி இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் தொடர்ந்து ரசிகன் தேவா கோயம்புத்தூர் மாப்ளே விஷ்ணு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். எனினும் பூவே உனக்காக காதலுக்கு மரியாதை துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்கள் அவருக்கு பிரபல நடிகர் அந்தஸ்தை கொடுத்தது.

- Advertisement -

அதன்பிறகு விஜய் அஜீத்குமார் இருவரும் போட்டி நடிகர்களாக தமிழ் சினிமாவில் மாறினர். ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி வசனம் பேசினர். ஒரு படத்தில் விஜய்க்கு எதிராக அஜீத் பேசினால் அடுத்த படத்தில் அஜீத்குமாருக்கு எதிரான ஒரு வசனத்தை விஜய் பேசுவார். பாடல் காட்சி வரிகளும் அப்படி வரும். இதனால் இவர்களின் ரசிகர்கள் கடுமையாக மோதிக்கொண்டது பலமுறை நடந்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தமிழக முதல்வரான பிறகு சென்னையில் மோட்டார் சிட்டி அமைப்பேன் என்பதும் அதற்கு அஜீத்குமார் வாழ்த்துகள் தெரிவிப்பதும் நேற்று லண்டனில் அஜீத்குமார் பங்கேற்ற கார் ரேஸ்சை விஜய் துவக்கி வைத்ததும் இருவரும் கட்டிப்பிடித்து நெருக்கம் காட்டியதும் தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாக அஜீத்குமார் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி போன்ற படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, சினிமாவில் யாருக்கும் இடம் தராமல் சுமார் 25 ஆண்டுகள் இருவரும் எதிர் துருவங்களாக வலம் வந்தார்கள். இப்போது இருவரும் இணைந்து அரசியலில் யாருக்கும் இடம் தராமல் எத்தனை ஆண்டுகள் களமாட போகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். ஐந்து மாதங்களில் தமிழகம் இப்படி ஒரு மாற்றத்தை காணும் என்று யாரும் நினைத்து கூட இருக்க முடியாது.

தமிழக அரசியல் சினிமாவை சுற்றித்தான் இருக்கும் போல. இது வரமா சாபமா என்று தெரியவில்லை. ரசிகர் என்ற போர்வையில் தல அஜித் அவர்களை இகழாமல் இருப்பதே சிலருக்கு நலம். ஸ்போர்ட்ஸில் மட்டுமே அவர் கவனம் இருப்பதுதான் பல அரசியல் கட்சிகளுக்கு பலம். தமிழக இளைஞர்கள் இவர்களைப் போல ஒரே துறையில் இல்லாமல் பல துறைகளில் முன்னேற பழகிக் கொள்ளுங்கள். இது ஒன்றே நான் இவர்களிடத்தில் எடுத்துக் கொள்ளும் நல்ல விஷயம் என்று இயக்குனர் மோகன்ஜி அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்