- Advertisement -
கீதா ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் புராண படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மீண்டும் இணைய உள்ளனர். இயக்குனர் சொன்ன கதைக்கு அல்லு அர்ஜுன் சம்மதம் தெரிவித்துவிட்ட போதிலும் ஏற்கனவே கமிட் ஆன அவரது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் பிஸியாக உள்ளார். அதனால் இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அவர் அதுவரை காத்திருப்பாரா? அல்லது அதற்குள் வேறு புதிய படம் இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





