- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் படத்துல நீ நடிக்கக் கூடாது - டைரக்டரின் தம்பியை மறுத்த அந்த பிரபல நடிகர்

என் படத்துல நீ நடிக்கக் கூடாது – டைரக்டரின் தம்பியை மறுத்த அந்த பிரபல நடிகர்

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம், வரும் அக்டோடபர் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்னதாக வரும் 30ம் தேதி, படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரமாண்டமாக நடக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படமான தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். படப்பிடிப்புக்கான ஆரம்ப கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இயக்குநர் வெங்கட் பிரபு ஜாலியான, அதே வேளையில் ஜனரஞ்சகமாக படங்களை தரும் இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். சென்னை 28, மங்காத்தா, கோவா, மாநாடு, மாசு என்கிற மாசிலாமணி, சரோஜா, பிரியாணி, பார்ட்டி, மன்மத லீலை போன்ற படங்களை தந்திருக்கிறார். இதில் பல படங்கள் நல்ல வெற்றியை பெற்றவை.

- Advertisement -

தமிழ் சினிமாவில், முதலில் நடிகராக தான் வெங்கட் பிரபு தனது கேரியரை துவக்கினார். சிவகாசி, ஏப்ரல் மாதத்தில் போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்துக்கு பிறகு சென்னை 28 படத்தை இயக்கினார். சென்னை வாழ் இளைஞர்களின் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சென்னை 28 இரண்டாம் பாகம், முதல் பாகம் அளவுக்கு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட்பிரபு. இளைய மகன் பிரேம்ஜி. தனது படங்களில், தனது தம்பிக்கும் ஒரு கேரக்டர் எப்படியும் கொடுத்து விடுகிறார் வெங்கட்பிரபு. கதை இல்லாமல் கூட வெங்கட் பிரபு படம் பண்ணுவார்.ஆனால், தம்பி இல்லாமல், படம் பண்ண மாட்டார் என, தமிழ் சினிமா உலகில் கிண்டலாக கூறப்படுவது உண்டு.

- Advertisement -

இந்நிலையில், சமீபத்தில் வெங்கட்பிரபு – பிரேம்ஜி ஒன்றாக அளித்த பேட்டி ஒன்றில் நடந்த சம்பவம் ஒன்றை பற்றி பேசினர். அப்போது, நானும் உங்க அண்ணனும் படம் பண்ணும்போது நீ என்னுடைய படத்தில் நடிக்க கூடாது, என நடிகர் விஜய், பிரேம்ஜியை பார்த்து சொல்லி விட்டார். ஏன் அண்ணே, என பிரேம்ஜி கேட்ட போது, நீ அவரோட( அஜீத்) ஆளுன்னு எல்லோருக்கும் தெரியும். வேணும்னா, என்னோட படத்துக்கு நீ மியூசிக் பண்ணு. ஆனா, நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

ஏற்கனவே, உங்க ரசிகர்கள் கண்டபடி என்னை திட்டிகிட்டு இருக்காங்க, எப்படியாவது இந்த படத்துல எனக்கு வாய்ப்பு கொடுங்க, என விஜய் கிட்ட கெஞ்சிகிட்டு இருந்தான் என, உடன் இருந்த இயக்குநர் வெங்கட்பிரபுவும் சிரித்தபடி கூறினார். இனி படப்பிடிப்பு துவங்கிய பின்பு தான், பிரேம்ஜிக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தாரா, இல்லையா என்பது தெரிய வரும்.

- Advertisement -

சற்று முன்