- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அஜீத்குமாரின் தீவிரமான ரசிகை, ஆனால் இப்போது நான் வருத்தப்படுவது விஜய்க்காக தான் - பிரபல...

நான் அஜீத்குமாரின் தீவிரமான ரசிகை, ஆனால் இப்போது நான் வருத்தப்படுவது விஜய்க்காக தான் – பிரபல மாஸ் நடிகரின் மனைவி ஓபன் டாக்!

- Advertisement -

பிரபலமான முன்னணி நடிகர்களுக்கு ரசிகர்களாக சாதாரண மக்கள் தான் இருக்கிறார்கள் என்று நினைக்க முடியாது. சாதாரண மக்கள் மட்டுமின்றி பெரிய பெரிய தொழிலதிபர்களும், விஐபிகளும், அதிகாரிகளும், அரசுத் துறை சார்ந்தவர்களும் ரசிகர்களாக இருப்பது வழக்கம்.

அதுமட்டுமின்றி சினிமா துறையில் இருப்பவர்களே பிரபல நடிகர்களுக்கு மிகத் தீவிரமான ரசிகர்களாக இருப்பார்கள் என்பதும் பலரும் அறியாத உண்மை. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களுக்கு பல இளம் நடிகர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்போது உள்ள விஜய் கூட ஒரு காலத்தில் ரஜினியின் மிக தீவிரமான ரசிகராக இருந்தவர்தான். அதேபோல் அஜித்தும் ஒரு படத்தில் தான் ஒரு ரஜினி ரசிகன் என்று ஒரு காட்சியில் வெளிப்படுத்தி இருப்பார்.

- Advertisement -

அது போல் நடிகர்களுக்கு திரைத்துறை சார்ந்தவர்களே மிக தீவிரமான ரசிகர்களாக இருப்பார்கள். அந்த வகையில் நடிகை நஸ்ரியா அஜித்குமாரின் மிக தீவிரமான ரசிகையாக இருக்கிறார். நஸ்ரியா தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தனுஷூடன் நையாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி, நேரம் போன்ற படங்களில் நடித்தவர்.

மாமன்னன், வேலைக்காரன், விக்ரம் போன்ற படங்களில் நடிப்பில் அசத்திய நடிகர் பகத் பாசிலின் மனைவி என்பது பலரும் அறியாத உண்மை. டைரக்டர் பாசில் காதலுக்கு மரியாதை என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு பூவே பூச்சூடவா போன்ற படங்களை இயக்கியவர். அவரது மகன்தான் நடிகர் பகத் பாசில். நடிகர் பகத் பாசில் மனைவி நடிகை நஸ்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நஸ்ரியா இப்போதும் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். மிக விரைவில் அவர் நடிக்கும் படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாக்கலாம். இந்நிலையில் நஸ்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், நான் நடிகர் அஜீத்குமாரின் மிகத் தீவிரமான ரசிகை. ஆனால் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியலில் கவனம் செலுத்துவது வருத்தமளிப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

டிவிட்டர் பக்கத்தில் அவர் செய்துள்ள உணர்ச்சி பூர்வமான அந்த பதிவில், நான் நடிகர் அஜித் குமாரின் மிகப்பெரிய ரசிகையாக இருந்தாலும், விஜய் 69 இது தளபதி விஜயின் கடைசி படம் என்பதை யோசிக்கும் போது, மிகவும் கஷ்டமாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.ஒரு ரசிகையாக விஜய் 69 கடைசி படம் என்று பலரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயத்தை, பிரபல நடிகையான நஸ்ரியாவும் இந்த பதிவின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இது இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்