- Advertisement -
Homeபொழுதுபோக்குபடம் ரிலீஸாவதற்கு முன்பே பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆயிடுச்சே? நடிகர் தனுஷ் பெயரில் நடந்த நூதன மோசடி...

படம் ரிலீஸாவதற்கு முன்பே பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆயிடுச்சே? நடிகர் தனுஷ் பெயரில் நடந்த நூதன மோசடி – விரைவில் போலீசார் விசாரணை!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி பாடகராக தயாரிப்பாளராக சமீப காலமாக பிஸியான இயக்குனராகவும் மாறியிருக்கிறார். ப பாண்டி ராயன் வெற்றிப் படங்களை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்த படம் நீக் என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதில் இம் புதுமுக நடிகர், நடிகைகள் அதிகளவில் நடித்துள்ளனர். காதலை மையப்படுத்திய ஒரு ஜாலியான படமாக இது உருவாகி உள்ளது. டீன் ஏஜ் வயதினரை குஷிப்படுத்தும் காதல் கதையாக இதை தனுஷ் டைரக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் தனுஷின் மேலாளராக இருப்பவர் ஸ்ரேயாஸ். இவர் ரசிகர்கள் மத்தியில் அதிக பரிச்சயம் இல்லாதவர். ஆனால் தனுஷ் படங்கள் சார்ந்த விஷயங்கள், கால்ஷீட் விவகாரங்கள் என அவர்தான் கவனித்துக்கொள்வதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் நீக் படத்தை தொடர்ந்து நீக் படம் 2ம் பாகமாக விரைவில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த படத்தையும் நடிகர் தனுஷ்தான் டைரக்ட் செய்ய உள்ளார்.

அதனால் டீன் ஏஜ் வயதில் உள்ள பெண்கள், குறிப்பிட்ட மொபைல் எண் மற்றும் வாட்சப் எண்ணில் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் என்ற பெயரில் வலைதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு செய்யப்பட்டு, நடிப்பில் ஆர்வம் உள்ள பல இளம்பெண்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டுள்ளனர்.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு ஓட்டலில் நேரில் சந்திக்கவும், நீக் படம் குறித்து பேச நேரம் ஒதுக்கவும் வாட்சப் மெசேஜில் ஸ்ரேயாஸ் என்பவர் தரப்பில் இருந்து வந்த தகவல்களால் பெண்கள் பலரும் குழப்பமாகி பிறகு உஷாராகி விட்டனர். அதற்கு பின்புதான், இப்படி நீக் 2 படத்தில் நடிக்க புதுமுக இளம்பெண்கள் தேவை என அறிவித்தது நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் அல்ல, யாரோ போலியான நபர்தான் இப்படி ஒரு தில்லுமுல்லு செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

இப்படி தனுஷ் பெயரிலும், தனுஷ் மேலாளர் ஸ்ரேயாஸ் பெயரிலும் நடந்துள்ள நூதன மோசடி சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு அறிவிப்பை நான் வெளியிடவில்லை என ஸ்ரேயாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மிக விரைவில் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட உள்ளது. போலீசார் விசாரணையில் இந்த மோசடி விவகாரத்தில் ஸ்ரேயாஸ் என்ற பெயரில் ஈடுபட்ட போலி நபர் யார் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

- Advertisement -

சற்று முன்