நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே ஆன்மீக விஷயங்களில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். அதனால் நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கமும் அவருக்கு இருக்கிறது. குறிப்பாக ஆன்மீகங்கள் வாழ்க்கை தத்துவங்கள் சார்ந்த புத்தகங்களை அவர் விரும்பி படிப்பது வழக்கமாக உள்ளது.
மேலும் அவர் தனது படங்களில் பாடல் வரிகளில் வசனங்களில் வாழ்க்கை சார்ந்த தத்துவங்களை அப்போது அவ்வப்போது வெளிப்படுத்துவது வழக்கமாக உள்ளது. மற்ற ஹீரோக்களின் படங்களில் இது போன்ற தத்துவங்களும் வாழ்க்கை அனுபவங்களை கொண்ட பாடல் வரிகளும் பெரும்பாலும் இருக்காது.
ஆனால் ரஜினிகாந்த் நடித்த படங்களில் பாடல்களில் மட்டும் எப்போதுமே இது போன்ற வாழ்க்கை தத்துவங்களை கொண்ட கருத்துகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக பாட்ஷா படத்தில் ரா ராரா ராமையா என்ற பாடலில் எட்டுக்குள்ள வாழ்க்கையை பிரித்துக்கொள் என்று மனித வாழ்க்கையில் 8 ஆண்டுகளைக் குறிப்பிட்டு எட்டு எட்டு ஆண்டுகளில் என்னென்ன மாதிரியான வாழ்க்கை நிலைகளை அடைய வேண்டும் என்பதை நடிகர் ரஜினிகாந்த் அந்த பாடல் மூலம் கூறியிருப்பார்.
அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் பங்கேற்கும் சினிமா நிகழ்ச்சிகள் பொது விழாக்கள் அல்லது ஆன்மீகக் கூட்டங்கள் எதுவாக இருந்தாலும் அங்கே தனது வாழ்க்கை சார்ந்தும் அனுபவம் சார்ந்தும் பல ஆன்மிக விஷயங்களை குறிப்பாக சமூக கருத்துக்களை தத்துவங்களை அவர் வெளிப்படுத்துவார்.
மனதில் நிற்கும் படியான நல்ல தத்துவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் அந்த நிகழ்ச்சிகளில் அவர் கூறுவது வழக்கமாக உள்ளது. அதனால் தான் எப்போதுமே ரஜினிகாந்த் பேச்சு என்பது மக்கள் மத்தியில் மிகவும் கவனிக்கப்படுவதாகவும் அதிக வரவேற்பை பெறுவதாகவும் இருந்து வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, நம் வாழ்க்கையில் 3 விஷயங்கள் இருக்கும் போது அதை பற்றி நமக்கு தெரியவே தெரியாது. அதில் ஒன்று இளமை ரெண்டு ஆரோக்கியம் மூன்று நல்ல நேரம். இந்த மூணும் நமக்கு இருக்கும் போது தெரியாது. போன பிறகுதான் தெரியும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.





