- Advertisement -
Homeபொழுதுபோக்குநம்மை வாழ வைத்த சினிமாவை நாமே அழிக்க நினைக்க கூடாது - இயக்குனர் பேரரசு பேச்சால்...

நம்மை வாழ வைத்த சினிமாவை நாமே அழிக்க நினைக்க கூடாது – இயக்குனர் பேரரசு பேச்சால் கோலிவுட்டில் பரபரப்பு!

- Advertisement -

சமீபகாலமாக சினிமாவை விமர்சிப்பவர்கள் புற்றீசல் போல மிகவும் அதிகமாகி விட்டனர் அதிலும் குறிப்பாக தமிழில் புதிய படங்கள் வெளியாகும் போது ஒரு படைப்பை விமர்சனம் செய்வது போல் இல்லாமல், அந்த படம் குறித்து விமர்சிக்காமல் தங்களுக்கு பிடிக்காத நடிகர், நடிகைகள் இயக்குனர்கள் மேல் உள்ள வன்மத்தை கக்குவது அதிகரித்து வருகிறது.

தங்களது அபிமான நாயகன் நடித்த படத்தைத் தவிர வேறு எந்த படமும் சிறப்பாக இருந்து விடக்கூடாது என்கிற வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாகவே அவர்க்ளில் பலரும் விமர்சனம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஸ்டார் நடிகர் நடித்திருந்தாலும் நெகட்டிவ் விமர்சனங்களால் இந்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விடுகின்றன.

- Advertisement -

அதற்கு சமீபத்திய உதாரணமாக இந்தியன் 2 கேம் சேஞ்சர் தக்லைஃப் கங்குவா உள்ளிட்ட படங்களை சொல்லலாம். இதில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வெளியான கூலி படம் வரை கடும் விமர்சனங்கள் தொடர்கின்றன. ஆனால் கூலி படத்தில் உள்ள லாஜிக் மிஸ்டேக்குகள், கதை திரைக்கதையில் உள்ள சொதப்பல்களை பொதுவான சினிமா ரசிகர்களே விமர்சிக்க செய்கின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் எஸ்எஸ் முருகராசு இயக்கத்தில் விஜய் கௌரிஸ் ஸ்மேகா ஆதர்ஷ் மதிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கடுக்கா என்ற படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு விமர்சனங்கள் குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார். இயக்குனர் பேரரசு நடிகர் விஜய் நடித்த சிவகாசி திருப்பாச்சி ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர். மேலும் திருவண்ணாமலை தர்மபுரி பழனி திருத்தணி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடுக்கா பட விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது, சினிமாவில் இருப்பவர்களே சினிமாவுக்கு ஆபத்தாக மாறி இருக்கின்றனர். சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இப்படி எல்லோரும் சுயநலமாக யோசித்தால் எப்படி சினிமா நல்லா இருக்கும்? அவர்களே சினிமாவை அழிக்கின்றனர். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை. நாங்கள் பேசுவது ஆதங்கம்தான், இதற்கு தீர்வு இல்லை.

நம்மை வாழவைத்த சினிமாவை நாம் வாழ வைக்க வேண்டும். ஒரு படம் வெளியாகிவிட்டாலே அது விமர்சனத்திற்கு உள்ளானதுதான். ஆனால் படத்தைப் பற்றி விமர்சனமாக இல்லாமல் சிலர் படம் ஓடக்கூடாது, படத்தை பார்க்கக்கூடாது, அழிக்க வேண்டும் என்பதற்காகவே வன்மத்தை காக்கும் விதமாக விமர்சனம் செய்கின்றனர். இப்போது படம் பார்ப்பவர்கள் எல்லாமே விமர்சனம் செய்கிறனர். நல்லா இருக்கிறதா இல்லையா என சொல்வதை விட வன்மத்தை கக்குகின்றனர் என்று இயக்குனர் பேரரசு பேசியிருக்கிறார். இது தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்